For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பி.யில் திடீர் திருப்பம்... காங். கமல்நாத் அரசுக்கு 2 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு 2 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக கவிழ்த்தது. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்ப்போம் என பாஜக தலைவர்கள் பேசிவருகின்றனர்.

2 BJP MLAs vote for Kamalnaths Cong Govt in MP Assembly

இதற்கு காங்கிரஸும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அம்மாநில சட்டசபையில் கமல்நாத் அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்ட திருத்த மசோதா நிறைவேற 2 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த கமல்நாத், நாங்கள் மைனாரிட்டி அரசு என்று பாஜக கூறி வருகிறது. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்கின்றனர். சட்டசபையில் இன்று 2 பாஜக எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

கர்நாடகாவில் ஜேடிஎஸ் குமாரசாமி தலைமையிலான அரசு என்பதால் காங்கிரஸ் கட்சியினரே ஆட்சி கவிழட்டும் என விரும்பினர். மத்திய பிரதேசத்தில் அப்படி கோட்டை விடாது... பாஜகவுக்கு பதிலடி தரும் என்பதையே இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.

English summary
Two BJP MLAs vote in favour of Kamal Nath Govt during voting on criminal law(amendment) in Madhya Pradesh assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X