For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

29,000 அடி.. நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. 400 பயணிகள்.. டிக் டிக் நிமிடங்கள்!

கொல்கத்தாவில் நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும்படி வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும்படி வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக சாலைகளில் டிராபிக் ஏற்படுவது போலவே ஆகாயத்திலும் டிராபிக் ஏற்படுவது வழக்கம். ஒரே நேரத்தில் வானத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் பறப்பது வழக்கம்.

இந்த விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தொடர்ந்து வழிகாட்டி வருவார்கள். ரேடார் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பம் மூலம் இதை அவர்கள் செய்வார்கள். இந்த நிலையில்தான் இதில் சிறிய பிசகு ஏற்பட்டு இருக்கிறது.

[காற்றில் பறக்கிறது ட்ரம்ப்பின் மானம்.. பேபி பலூனில் அழுமூஞ்சு அதிபரின் முகம்]

இரண்டு விமானம்

இரண்டு விமானம்

கொல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்றுள்ளது. அதே நேரத்தில் அதற்கு எதிர் திசையில் ஏர் ஏசியா விமானம் வந்துள்ளது. இரண்டு விமானத்தையும் சேர்த்து சுமார் 400 பயணிகள் பயணித்து இருக்கிறார்கள்.

அருகருகே வந்தது

அருகருகே வந்தது

இந்த இரண்டு விமானமும் தவறுதலாக 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து இருக்கிறது. அதாவது இரண்டு விமானமும் எதிர் எதிர் திசையில், ஒரே உயரத்தில், ஒரே நேரத்தில் வந்துள்ளது. வேகமாக வந்த இரண்டு விமானமும் அருகருகே நெருங்கி உள்ளது. போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாத்தியம்

அசாத்தியம்

ஆனால் விமானம் அருகருகே வந்தவுடன் இரண்டு விமானத்தின் விமானிகளும் சுதாரித்தனர். இந்த மாதிரி சமயங்களில் சத்தமாக ஒலியெழுப்ப ''ஹார்ன்'' ஒன்றும், சிக்னல் ஒன்றும் பயன்படுத்தப்படும். இரண்டு விமானமும் அந்த சிக்னலை எழுப்பி இருக்கிறது. இதன் காரணமாக, அந்த விமானங்கள் கடைசி நேரத்தில் வேறு வேறு திசைக்கு திருப்பப்பட்டது.

விசாரணை

விசாரணை

இதன் காரணமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருக்கும் பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

English summary
2 planes came at the same height in opposite direction has diverted last min in Kolkata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X