For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லக்னோவில் 20,000 கிலோ மேகி நூடுல்ஸ் பறிமுதல்- அதிர்ச்சியில் உணவுக் கட்டுப்பாடுத் துறை!

Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் லக்னோவில் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் சில மாதங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் பரபரப்பாக விற்பனையாகி வந்தது. 2 நிமிடத்தில் உணவாக தயாரித்து விடலாம் என்பதால் இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து வந்தது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 30 கோடிக்கும் அதிகமான மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பரபரப்பாக விற்பனையாகி வந்தது.

20,000 kgs of Maggi instant noodles seized in Lucknow

மேகி நூடுல்ஸ்சில் காரீயம் மற்றும் வேதிப்பொருள் அதிக அளவில் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் மேகி நூடுல்ஸ்சுக்கு மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தடை விதித்தன. இறுதியில் மத்திய அரசின் உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ்க்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நுகர்வோர் சட்டப்பிரிவை மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லேவுக்கு எதிராக பிரயோகிக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் அமைந்துள்ள நெஸ்ட்லே நிறுவன கிடங்கிலிருந்து இருபதாயிரம் கிலோ மேகி நூடுல்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

English summary
The Uttar Pradesh Food and Drug Administration (FDA) has seized 20,000 kgs of the two minute noodles from a Nestle warehouse in Lucknow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X