For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானாவில் பள்ளி பஸ் மீது ரயில் மோதி 25 குழந்தைகள் பலி

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பள்ளி வாகனம் மீது நான்தத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 25 குழந்தைகள், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் உள்ள தூப்ரானில் உள்ளது ககடியா பள்ளி. அந்த பள்ளி வாகனம் ஒன்று இன்று காலை 40 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றது.

செல்லும் வழியில் மசைபேட்டை கிராமத்தில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை பள்ளி வாகனம் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த நான்தத் பயணிகள் ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளில் 20 பேர் பலியாகினர், டிரைவரும் பலியானார்.

25 children, driver killed as school bus collides with train in Telangana

இந்த விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பலியாகினர். ரயில் மோதிய வேகத்தில் பள்ளி வாகனம் ஒரு கிலோ மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டது. மேலும் குழந்தைகளின் உடல்கள் அந்த பகுதியில் சிதறிக் கிடந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

25 children, driver killed as school bus collides with train in Telangana

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் நடந்துள்ளது.

பள்ளிக்கு சென்ற குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A school bus carrying 40 children collided with a passenger train near Medak in Telangana. 25 kids and bus driver lost their lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X