For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட கொடுமையே.. ராஜஸ்தான் மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருட்டு!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையின் ஊழியரின் ஒத்துழைப்புடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

20 doses of Covaxin vaccine stolen from Jaipur hospital in rajasthan

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதி வேகத்தில் சென்று வருகிறது. தினசரி பாதிப்புகள் 1,50,000-ஐ கடந்து உச்சம் தொட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்திலும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை மட்டும் 5528 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஜெய்ப்பூரில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் ஜெய்ப்பூரின் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள கன்வதியா மருத்துவமனையில் இருந்து பாரத் பயோடெக்கின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்வதியா அரசு மருத்துவமனையின் குளிர் சேமிப்பு கிடங்கிலிருந்து இந்த தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளன.

ஏப்ரல் 12-ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் இந்த 320 டோஸ்களை தேடியபோதுதான் அவற்றினை காணவில்லை என்று தெரியவந்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி கேமரா மட்டுமே வேலை செய்யாத இடத்திலிருந்து இந்த தடுப்பூசி திருடப்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையின் ஊழியரின் ஒத்துழைப்புடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

English summary
The disappearance of 320 doses of vaccine from a hospital in Jaipur, Rajasthan, has come as a shock
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X