For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

14 ஆண்டுகளில் எல்லைப் பகுதியில் 20 பாதுகாப்பு வீரர்கள் மாயம்... ஓர் அதிர்ச்சித் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: 14 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சுமார் 20 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.

கடந்த 1996 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பணி புரிந்த வீரர்கள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கப் பட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலில் அக்காலக்கட்டத்தில் 20 வீரர்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.

20 Indian soldiers missing from border areas: RTI

அந்த விளக்கத்தின் படி, காஷ்மீர் எல்லைப் பகுதியில் 18 பாதுகாப்பு வீரர்களும், குஜராத் எல்லைப் பகுதியில் 2 வீரர்களும் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஹவில்தார் புபேந்திரா பகதூர் தபா, நேத்ரா பகதூர் தபா, நாயக் ஹார்க் பகதூர் ராணா மற்றும் லான்ஸ் நாயக் ராஜூ குரங்க் ஆகியோர் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா கதி பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு ஆகச்ட் 12ம் தேதி மாயமாகியுள்ளனர்.
  • இவர்களில் புபேந்திரா, நேத்ரா, ஜார்க் ஆகியோர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், ராஜூ டேராடூனைச் சேர்ந்தவர்.
  • கேப்டன் அவினாஷ் குமார் சர்மா மற்றும் 11 என்ஜினியர்கள் ஆகியோர் 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள அக்னூர் முகாமிலிருந்து மாயமாகியுள்ளனர்.
  • 1997ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் கேப்டன் சஞ்சீவ் பட்டாச்சார்யா மற்றும் லான்ஸ் நாயக் ராம் பகதூர் தப்பா ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
  • 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி ஜம்மு காஷ்மீரின் கக்சர் பகுதியில் விரேந்தர சிங் என்ற வீரர் மாயமாகியுள்ளார்.
  • கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கோபால் தாஸ் என்ற வீரர் பூஞ்ச் பகுதியில் மாயமானதாக அந்த அரசு விளக்கப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2003ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி கார்கில் பகுதியில் லான்ஸ் நாயக் ஜோஸ் ஜேம்ஸ் என்ற வீரர் காணாமல் போயுள்ளார்.
  • அதேபோல், 2005ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி அதே பகுதியில் மகேஷ் மற்றும் சைலேஷ் சுக்லா என்ற வீரர்களும், 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதி நாயக் சந்தீப் சிங் என்ற வீரரும் காணாமல் போயுள்ளனர்.
  • அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் படாலிக் பகுதியில் விக்ரம் சிங் மற்றும் பிஷ்னு ராய் ஆகியோர் மாயமாகியுள்ளனர்.
  • மேலும், அந்த அறிக்கையின் படி ஹவில்தார் ரஞ்சித் குமார் மற்றும் ராகேஷ் குமார் ஆகிய வீரர்கள் சியாசின் பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காணாமல் போயுள்ளனர்.
  • அதேநாளில், லேக் பகுத்யில் சேவாங் டோர்ஜாய் மற்றும் கர்மா நாமாகில் ஆகிய வீரர்கள் மாயமாகியுள்ளதாக அந்த பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த பதில் அறிக்கையில் வீரர்கள் மாயமானதற்கான காரணங்களோ, அந்த வீரர்களின் தற்போதைய நிலைமையோ தெளிவாகக் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Twenty Indian soldiers posted in border areas of the country, most of them in Jammu and Kashmir, have gone missing from 1996 to 2010, according to an RTI reply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X