For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் மர்ம நோய்.. 228 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல்.. காரணம் என்ன?

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திராவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம நோய் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுரு என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 46 குழந்தைகள் உள்பட 228 பேருக்கு மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டது.

இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியையும் சேர்ந்தவர்கள் அல்ல.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,320 பேருக்கு தொற்று.. 1,398 பேர் டிஸ்சார்ஜ்.. 16 பேர் உயிரிழப்பு..!தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,320 பேருக்கு தொற்று.. 1,398 பேர் டிஸ்சார்ஜ்.. 16 பேர் உயிரிழப்பு..!

முதியவர்கள்

முதியவர்கள்

இவர்கள் எல்லாம் பொதுவான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவும் இல்லை. முதியவர்களும் குழந்தைகளும்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் வீடு திரும்பிவிட்டனர். இதில் 6 வயது சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால் அவர் விஜயவாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவக் குழுவினர் எலுருவுக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதில் பிரச்சினை இருப்பது போல் தெரியவில்லை.

அச்சுறுத்தல் இல்லை

அச்சுறுத்தல் இல்லை

இவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனையும் செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா இல்லை. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அல நானி கூறுகையில் கொரோனா இல்லை என வந்துவிட்டது. பொதுமக்களின் உயிருக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

யாரும் அச்சப்பட வேண்டும். தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நோயாளிகளின் உடல்நிலையை கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு என்னவானது என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் இந்த மக்கள் அனைவரும் ஒரே பகுதியினர் இல்லை.

கொரோனா

கொரோனா

ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்களும் இல்லை, அனைத்து வயதை உடையவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இருந்தன. அவர்களுக்கு கொரோனாவும் இல்லை.

சிடி ஸ்கேன்

அவர்கள் கோதாபேடா, படாமரா வீதி, வங்கயா குடெம் ஆகிய பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தண்ணீரில் இருந்து நோய் ஏதேனும் பரவியதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிடி ஸ்கேன் எடுத்ததிலும் நார்மலாகவே இருக்கிறது.

அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

பல நோயாளிகள் தங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் இருக்கின்றன. இன்னும் சிலர் மன உளைச்சலால் உள்ளனர். அவர்களுக்கு மனநல மருத்துவரை அணுக கூறியுள்ளோம். இதில் ஒன்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

English summary
200 people were suffered for Mystery disease in Andhra Pradesh's West Godavari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X