For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2002 மதவன்முறைகளுக்கும் மோடியின் குஜராத் அரசுக்கும் தொடர்பு இல்லை: நானாவதி கமிஷன் அறிக்கை

Google Oneindia Tamil News

அகமதாபாத்: 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு நிகழ்த்தப்பட்ட மதவன்முறைகளுக்கும் குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான அரசுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று நானாவதி கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ளது.

2002-ல் கரசேவகர்கள் பயணித்த ரயில் பெட்டி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் தீக்கிரையானது. இதனையடுத்து அம்மாநிலத்தில் மிக மோசமான மதவன்முறைகள் நிகழ்ந்தன.

2002 Riots: Nanatavi Commission gives clean chit to Modi led Gujarat Govt

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த மதவன்முறைக்கு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியும் அவரது அரசும்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் மோடிக்கு அமெரிக்கா போன்றநாடுகள் பயண தடை விதித்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்னமும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

பாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு! பாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு!

இந்நிலையில் 2002-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த குஜராத் மதவன்முறைகள் தொடர்பாக விசாரிக்கப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கை இன்று அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது நானாவதி கமிஷன் அறிக்கை.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கையில், 2002 வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை. இந்த வன்முறைகளுக்கும் அப்போதைய மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Nanatavi Commission report said that post Godhra train burning riots were not organized. Nanavti Commission Report also has given clean chit given to Narendra Modi led Gujarat Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X