For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

80 பேரை பலி கொண்ட ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு- 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: 2008-ம் ஆண்டு 80 பேரை பலி கொண்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டோரில் ஒருவரை மட்டும் நீதிமன்றம் விடுவித்துள்ளத்உ.

2008-ம் ஆண்டு மே 13-ந் தேதி ஜெய்ப்பூரில் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 80 பேர் பலியாகினர். 185 பேர் படுகாயமடைந்தனர்.

2008 Jaipur Serial Blasts Case: Four held Guilty

இவ்வழக்கை ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகளாக விசாரித்து வந்தது. இவ்வழக்கில் முகமது சயீஃப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான் மற்றும் சபீ உர் ரஹ்மான் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றம்சாட்டப்பட்ட சாபாஸ் ஹூசைன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதனால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

English summary
A Jaipur Court today pronounced Four accused were held Guilty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X