For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறையாத கேதர்நாத் வடுக்கள்... சாலை வழியாக பயணம் செய்ய 8 பேர் மட்டுமே பதிவு

Google Oneindia Tamil News

டேராடூன்: கடந்தாண்டு உண்டான கேதர்நாத் வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்காணோர் பலியான நிலையில் இந்தாண்டு சாலை மார்க்கமாக புனித பயணம் மேற்கொள்ள வெறும் 8 பேர் மட்டுமே பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனிதபயணம் மேற்கொள்ளும் ஆன்மிக தளங்களில் ஒன்று கேதர்நாத். ஆனால், கடந்தாண்டு அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் வரும் மே மாதம் 4-ம் தேதி கேதர்நாத் கோவில் பக்தர்களின் வசதிக்காக திறக்கப்பட இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், அக்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை பத்துக்கும் குறைவானவர்களே பேர் பதிவு செய்துள்ளார்களாம்.

13 லட்சம் மக்கள்...

13 லட்சம் மக்கள்...

கடந்த 2013ம் ஆண்டு சுமார் 13 லட்சம் மக்கள் கேதர்நாத்திற்கு புனித பயணம் மேற்கொண்டார்களாம். ஆனால் இம்முறை கோவில் திறப்பு அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்தும் இதுவரை 8 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளார்கள்.

விமான பயணம்...

விமான பயணம்...

வான் மார்க்கமாக பயணம் செய்ய இதுவ்ரை 77 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சீரமைப்பு பணிகள்...

சீரமைப்பு பணிகள்...

இந்நிலையில் கோவில் நடை திறப்பு குறித்து அம்மாநில முதல்வர் ஹரீஸ் ராவத் கூறுகையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக கேதார்நாத் கோயில் மோசமாக பாதிக்கப்பட்டது.அவை தற்போது சீரமைக்கப்பட்ட வரும் மே மாதம் 4-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

தயார் நிலையில் மீட்புக்குழு...

தயார் நிலையில் மீட்புக்குழு...

தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டும் பட்சத்தில் பக்தர்களை காப்பாற்றுவதற்காக மீட்பு குழு தயார் நிலையி்ல் வைக்கப்பட்டுள்ளது.

மே மாதம் திறப்பு...

மே மாதம் திறப்பு...

மே மாதம் 2-ம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களும், மே 4-ம் தேதி கேதர்நாத்தும், 5-ம் தேதி பத்ரிநாத் கோவி்ல்களும் திறக்கப்பட உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Seems like last year's Kedarnath tragedy is still haunting pilgrims as less than ten people have registered for road travel this year. Only 77 people have registered for chopper service for the holy yatra this year. As many as 13 lak people had traveled to the holy shrines of Kedarnath and Badrinath in 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X