For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெக்கிகளுக்கு நல்ல செய்தி.. 2018 பட்ஜெட்டில் விலை குறையப்போகும் கேட்ஜெட்டுகள்!

2018 பட்ஜெட்டில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    2018 பட்ஜெட் ... அல்வா கொடுத்து இனிப்புடன் தொடங்கும் ஜெட்லீ

    டெல்லி: பொதுவாக பட்ஜெட்டின் போது மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் அதிகமாக கருத்தில் கொள்ளப்படும். ஆனால் பலரும் மொபைல், டேப்லெட், கணினி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் விலை மாற்றத்தை கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.

    இப்போதெல்லாம் நாம் காய்கறி, உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவோம், ஆண்ட்ராய்ட், ஆப்பிள் இல்லாமல் இருக்க முடியாது. இந்த 2018 பட்ஜெட் இப்படி இருக்கும் நபர்களுக்கு எல்லாம் நல்ல செய்தி ஒன்றை கொண்டு வர இருக்கிறது.

    இந்த பட்ஜெட்டிற்கு பிறகு பெரும்பாலான கேட்ஜெட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கல்வி சார்ந்த கேட்ஜெட்களின் விலை குறையும்.

    பழைய விலை

    பழைய விலை

    சில வருடங்கள் முன்புவரை மொபைல், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு 5% வரி விதிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மொபைல் போன்களின் விலை மிகவும் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் கட்டுப்படுத்தும்படி இருந்தது. நிறைய பட்ஜெட் போன்களும் வர தொடங்கியது.

    குறைவானது

    குறைவானது

    இந்த நிலையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதேபோல் திடீர் என்று ஆன்லைன் வர்த்தகம் உச்சத்தை அடைந்தது. இதனால் இதன்மீது இருந்த 5 சதவிகித வரி நீக்கப்பட்டது, மொபைல்களில் மட்டும் குறைந்தபட்ச வரி விதிக்கப்பட்டது. மற்றபடி டேப்லெட்களில் வரி நீக்கப்பட்டது.

    மீண்டும் அதிகம்

    மீண்டும் அதிகம்

    ஆனால் ஜி.எஸ்.டி அறிமுகம் ஆன பின் மீண்டும் விலை கூடியது. டேப்லெட்களில் பூஜ்ய வரியில் இருந்து 18 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இதனால் திடீர் என்று விலை மிகவும் அதிகம் ஆனது. பட்ஜெட் போன்களின் உற்பத்தி குறைத்துக் கொள்ளப்பட்டது. இது மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது.

    'பழைய ஆண்ட்ராய்ட் செல்வம்'

    'பழைய ஆண்ட்ராய்ட் செல்வம்'

    இந்த நிலையில் பழைய ஆண்ட்ராய்ட் செல்வமாக மீண்டும் விலை குறைய இருக்கிறது. இந்த நிலையில் இந்த 18 சதவிகித வரி குறைத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த 2018 பட்ஜெட்டில் மீண்டும் 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 1ல் அறிமுகம் ஆகும் இந்த மாற்றத்தால் அந்த மாத இறுதியில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    2018 budget may decrease gadgets price. The 18% GST may decreased to 5%. Due to this fall in GST, most of the tablets, phones, and PC will fall in price.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X