For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீதி ஒரு ஸ்பீட் பிரேக்கர்.. மே. வங்கத்தில் மமதாவை பங்கமாக கலாய்த்த மோடி.. பரபர பிரச்சாரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா ஸ்பீட் பிரேக்கர் போல செயல்படுகிறார் என்று பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா ஸ்பீட் பிரேக்கர் போல செயல்படுகிறார் என்று பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி கடந்த ஒருவாரமாக தீவிரமாக நாடு முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று காலை அருணாசலப்பிரதேசம் சென்று அவர் பிரச்சாரம் செய்தார். அதன்பின் அங்கிருந்து மேற்கு வங்கம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேற்கு வங்க பிரச்சாரம்

மேற்கு வங்க பிரச்சாரம்

மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்தார். இதற்கு அருகில்தான் தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தில் மமதா பானர்ஜியை மிக கடுமையான விமர்சனம் செய்தார் பிரதமர் மோடி.

முக்கிய தலைகள் மோதும் தர்மபுரி.. இந்த ஒரு தொகுதிக்கு இத்தனை சிறப்பம்சமா?

என்ன பேசினார்

என்ன பேசினார்

பிரதமர் மோடி தனது பேச்சில் மமதாவை ''திதி'' என்று எல்லோரும் அழைப்பது போலவே பேசினார். அதில் , மேற்கு வங்க முதல்வர் மமதா மக்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார். அவர் முதல்வர் போல இல்லாமல், மிகவும் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார். அவர் ஏழைகளை வைத்து அரசியல் செய்கிறார். அவர் ஏழ்மையை இப்படியே வைத்து இருந்தால் மட்டும்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று நினைக்கிறார்.

ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கலாமா?... முதலமைச்சர் பழனிசாமி கொந்தளிப்புஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கலாமா?... முதலமைச்சர் பழனிசாமி கொந்தளிப்பு

ஸ்பீட் பிரேக்கர்

ஸ்பீட் பிரேக்கர்

மேற்கு வங்க முதல்வர் மமதா ஸ்பீட் பிரேக்கர் போல செயல்படுகிறார். பாஜக கொண்டு வரும் திட்டங்களை மமதா தடுக்கிறார். ஏழைகளை பாஜக முன்னேற்ற நினைக்கிறது: மமதா அதை தடுக்கிறார். எங்களை எந்த நலத்திட்டமும் செய்ய விடாமல் பிரச்சனை செய்கிறார்.

கிஷன் யோஜனா திட்டம்

கிஷன் யோஜனா திட்டம்

பிரதமரின் கிஷன் யோஜனா திட்டத்தை கூட தடுத்துவிட்டார். மற்ற மாநிலங்கள் இதனால் பயனடைந்து உள்ளது. இப்படி எல்லாம் செய்து ஏழைகளை அப்படியே வைத்திருக்க பார்க்கிறார். அப்போதான் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று இப்படி செய்கிறார்.

சாரதா ஊழல் எப்படி

சாரதா ஊழல் எப்படி

சாரதா ஊழல் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் மோசமாக மக்களை ஏமாற்றி உள்ளது. ஏழை மக்களின் பணத்தை இவர்கள் திருடி இருக்கிறார்கள். பாஜக இதை விசாரிக்கும். ஆனால் அதை விசாரிக்க விடாமல் மமதா எங்களுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுகிறார்.

70 லட்சம் விவசாயிகள்

70 லட்சம் விவசாயிகள்

70 லட்சம் விவசாயிகளின் வளர்ச்சியை மமதா தடுத்துவிட்டார். இந்த தேர்தல் பாஜக vs எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இல்லை. இந்த தேர்தல் தூய்மையான காவலாளிகளுக்கும் கறை படிந்த குற்றவாளிகளுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
2019 Lok Sabha election: DIDI is like a speed breaker says PM Modi against Mamata in West Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X