For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பர் போட்டி.. 2 ஒலிம்பிக் வீரர்கள் நேருக்கு நேர் மோதும் தேர்தல்.. ராஜஸ்தானில் சுவாரசியம்!

லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய இரண்டு விளையாட்டு வீரர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய இரண்டு விளையாட்டு வீரர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.

நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்கான பரபரப்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஐந்து மாநில தேர்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் பாஜக இந்த தேர்தலை சந்திக்கிறது.

அதே சமயம், அதில் வெற்றி வாகை சூடிய உற்சாகத்தில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. இதில் ராஜஸ்தானில் இப்போதுதான் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அங்கு லோக்சபா தேர்தலில் சுவாரசியமான போட்டி ஒன்று நடக்க இருக்கிறது.

இரண்டு பேரும் மோதுகிறார்கள்

இரண்டு பேரும் மோதுகிறார்கள்

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில்தான் இந்த போட்டி நடக்க உள்ளது. இங்கு பாஜக சார்பாக அமைச்சர் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ராஜவர்தான் சிங் ரத்தோர் நிற்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை எம்எல்ஏ கிருஷ்ணா பூனியா நிற்கிறார். இரண்டு ஒலிம்பிக் வீரர்கள் தங்களை எதிர்த்து நிற்க இருக்கிறார்கள்.

தீதி ஒரு ஸ்பீட் பிரேக்கர்.. மே. வங்கத்தில் மமதாவை பங்கமாக கலாய்த்த மோடி.. பரபர பிரச்சாரம்!தீதி ஒரு ஸ்பீட் பிரேக்கர்.. மே. வங்கத்தில் மமதாவை பங்கமாக கலாய்த்த மோடி.. பரபர பிரச்சாரம்!

ரத்தோர் யார்

ரத்தோர் யார்

பாஜகவை சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ராஜவர்தான் சிங் ரத்தோர் தற்போது விளையாட்டுதுறை அமைச்சராக இருக்கிறார். துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2004ல் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இவர் வெள்ளி வென்றார். இது இல்லாமல் துப்பாக்கி சுடுதலில் 2002, 2006 காமன்வெல்த்தில் தங்கமும், துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 2004, 2006ல் தங்கமும் வாங்கியுள்ளார்.

பூனியா யார்

பூனியா யார்

பூனியா தற்போது ராஜஸ்தான் சடுல்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் கடந்த தேர்தலில்தான் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இவர் டிஸ்கஸ் த்ரோ பிரிவில் 6ம் இடம் பிடித்தார். 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். 2013ல் இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் குதித்தார்.

ஜாதி வாக்குகள்

ஜாதி வாக்குகள்

ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் ஜாட் ஜாதியை சேர்ந்த மக்கள் 23% பேர் இருக்கிறார்கள். பூனியா ஜாட் ஜாதியை சேர்ந்தவர். அதேபோல் அங்கு ராஜ்புட் ஜாதி மக்கள் 10% பேர் இருக்கிறார்கள். ரத்தோர் ராஜ்புட் ஜாதியை சேர்ந்தவர். இதனால் அங்கு தேர்தலில் ஜாதி பெரிய முக்கியத்துவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மிக சுவாரசியம்

மிக சுவாரசியம்

இதில் ரத்தோர் இங்கு போட்டியிட போகிறார் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது, மாறாக பூனியா இங்கு போட்டியிட போவது திங்கள் கிழமைதான் அறிவிக்கப்பட்டது. அன்றுதான் அவருக்கே அங்கு தேர்தலில் போட்டியிட போகிறோம் என்று தெரிந்து இருக்கிறது. இரண்டு ஒலிம்பியன்ஸ் எதிர் எதிரே போட்டியிடுவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
2019 Lok Sabha election: In Rajasthan 2 Olympians Poonia and Rathore face one to one in Jaipur Rural.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X