For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2019 லோக்சபா தேர்தலில் தேஜகூ செல்வாக்கு குறைந்தாலும் வெற்றியை பாதிக்காது.. இந்தியா டுடே சர்வே!

2019 லோக் சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி அரசு மீதான மக்களின் பார்வை எப்படி உள்ளது என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

2019 lok sabha election India today survey: NDA would win 274 seats

இந்நிலையில் இந்தியா டுடே இன்று தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2019ஆம் ஆண்டிலும் மோடி அலைதான் வீசும் பிரதமர் மோடியின் செல்வாக்கு கடந்த தேர்தலைக் காட்டிலும் சற்று குறைந்திருந்தாலும் அது வெற்றியை பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 லோக் சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 323 இடங்களை கைப்பற்றிய நிலையில் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 274 எம்பி தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது. வெற்றிக்கு தேவையான 272 இடங்களை காட்டிலும் கூடுதலாக 2 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த தேர்தலைக்காட்டிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெறும் 60 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் வரும் தேர்தலில் 164 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகள் 105 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
2019 lok sabha election India today survey: NDA would win 274 seats. The UPA would win 164 seats in the lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X