For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல லட்சம் பேர்..மோடியின் மேற்கு வங்க பிரச்சாரத்தில் பெரும் கூட்டம்.. ஆட்களை சேர்த்தது இப்படித்தான்

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் மேற்கு வங்க பிரச்சாரத்தில் பெருங்கூட்டம் சேர்ந்தது இப்படித்தான்

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது.

    கடந்த ஒரு வாரமாக பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் ''கூச் பெஹார் '' பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

    இந்த பிரச்சாரத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது. இந்த பிரச்சாரத்தில் அவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார்.

    கூட்டத்தின் புகைப்படங்கள்

    கூட்டத்தின் புகைப்படங்கள்

    பிரதமர் மோடியின் இந்த மாநாட்டில் மிக அதிக எண்ணைக்கையில் மக்கள் கலந்து கொண்டார்கள். சுமார் 5-6 லட்சம் பேர் இந்த ஒரே கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரிய வைரலாகி இருக்கிறது.

    சிறிய இடம்தான் கொடுக்கிறார்கள்.. மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.. புலம்பிய மோடி!சிறிய இடம்தான் கொடுக்கிறார்கள்.. மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.. புலம்பிய மோடி!

    அப்போது இல்லை

    அப்போது இல்லை

    ஆனால் பிரதமர் மோடி சென்ற வாரம் மேற்கு வங்கத்தில் நடத்திய முதல் இரண்டு கூட்டங்களில் இவ்வளவு பேர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பாஜக கூட்டங்களில் 1 லட்சம் பேர் வரை மட்டுமே அதிகபட்சம் கலந்து கொண்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை திடீர் என்று அதிகரித்து இருக்கிறது.

    நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    இந்த நிலையில்தான் பாஜக சார்பாக இதற்காக ரயில்களில் பாஜகவினர் கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் கொல்கத்தாவில் மோடி பொதுக்கூட்டம் நடத்தினார். இதற்காக ரயில்களில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டனர். அதேபோல்தான் இந்த கூட்டத்திற்கும் மக்கள் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    கடந்த ஒரு வாரமாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து இருக்கிறது. 4 ரயில்களில் கடந்த 4 நாட்களாக 6 லட்சம் பேர் வரை இதற்காக அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். பாஜக பலமாக இருக்கும் உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கூட பாஜக தொண்டர்கள் இந்த கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    விளக்கம்

    விளக்கம்

    ஆனால் பாஜகவினர் இதற்கு வேறு மாதிரி விளக்கம் அளித்துள்ளனர். அதில் பாஜகவினரின் கூட்டம்தான் இது. மேற்கு வங்கத்தில் பாஜகவின் பலம் கூடிய இருக்கிறது. அதனால் அதிக அளவில் கூட்டம் வந்துள்ளது. இது முழுக்க முழுக்க மேற்கு வங்க மக்களின் கூட்டம் என்று கூறி உள்ளனர்.

    English summary
    2019 Lok Sabha election: This is how PM Modi managed to gather a huge number of crowd in West Bengal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X