For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Crime stories 2019: உள்ளே ஒன்னு வெச்சிருக்கேன்.. அலற வைத்த ஜோலி.. மிரண்டு போன கேரளா

சயனைடு கில்லர் ஜோலியின் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கூடத்தாயி கொலை!!! சொத்துக்காக ஆறு பேரை ஆட்டுக்கால் சூப்பில் விஷம் வைத்து கொன்ற ஜோலி விவகாரம் இந்த வருடம் கேரள மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய பகீர் சம்பவம் ஆகும்! இந்த ஜோலியின் ஸ்பெஷல் என்ன என்று தெரிந்தால் உண்மையிலேயே அதிர்ந்து போவீர்கள்!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள பகுதி கூடத்தொரை. இங்கு வசித்து வந்தவர் ஜான் தாமஸ். இவர் ஓய்வு பெற்ற ஒரு கல்வி அதிகாரி. இவரது மனைவி அன்னம்மாவும், ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியை. மகன் ரோய் தாமஸ் மற்றும், அன்னம்மாளுடன் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன் என இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் 2002 முதல் 2016 வரை இவர்கள் 6 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர். எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை. ஒரே மர்மமாக இருந்தது. ஆறு பேரின் சாவுமே ஒரே மாதிரியாக இருந்தது. அந்த சமயத்தில், இந்த உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்கள் இது சாதாரணமான மரணம் என்று சொல்லிவிட்டார்கள். இதையடுத்து உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன.

அழுகிய நிலையில் நிவேதா.. சிதைந்த முகம்.. வெளியே நீட்டிய எலும்பு.. வேலூரில் பரபரப்பு! அழுகிய நிலையில் நிவேதா.. சிதைந்த முகம்.. வெளியே நீட்டிய எலும்பு.. வேலூரில் பரபரப்பு!

 மர்ம மரணம்

மர்ம மரணம்

ஆனாலும் 6 பேர் இறந்ததில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று கோழிக்கோடு போலீசாரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கவும்தான், உடல்களை திரும்பவும் போஸ்ட்மார்ட்டம் செய்யலாம் என்று முடிவு செய்து, தோண்டி எடுத்து, கிடைத்த எலும்பு கூடு பாகங்களை ஆய்வுக்கும் அனுப்பி வைத்தனர். அப்போதுதான் 6 பேரின் உடல்களிலும் விஷம் இருந்தது உறுதியானதுடன், சொத்தை அபகரிக்க மருமகள் ஜோலி செய்த காரியம் இது என்பது தெரியவந்தது.

 தகவல்கள்

தகவல்கள்

இத்தனை காலம் தலைமறைவாக இருந்த ஜோலியை தீவிரமாக தேடி வந்த நிலையில், இப்போதுதான் கைது செய்துள்ளனர் போலீசார்.. விசாரணையில் ஜோலி சொல்லும் ஒவ்வொரு தகவலையும் கேட்டு கேரளாவே ஆடிப்போய் உள்ளது. ஜோலி என்ற பெண்ணை பார்த்தால் 6 பேரை கொன்றவர் போன்ற தோற்றமே தெரியாது... எப்போதும் கொலை மற்றும் கொலை தொடர்பான செய்திகளை படித்து கொண்டே இருப்பாராம் ஜோலி.

 சயனைடுகள்

சயனைடுகள்

அவரது ஹேண்ட் பேக்கில் லிப்ஸ்டிக், பேனா, மேக்கப் பொருட்களுடன் சயனைடையும் கலந்து வைத்திருப்பார்.. இதுதான் ஜோலியின் ஸ்பெஷல்! தனது மாமியாரின் சகோதரர் மாத்யூ மஞ்சடியில் என்பவரைக் கொல்ல மதுவை பயன்படுத்தியுள்ளார். மதுவில் சயனைடை கலந்து கொடுத்து அவரை காலி செய்தார். சாகடிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு இருவருமாக சேர்ந்து மது குடித்துள்ளனராம்.

 விசாரணைகள்

விசாரணைகள்

கணவன் ராய் தாமசுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதை இந்தவிசாரணையில் ஜோலியே ஒத்துக் கொண்டார். அதேபோல, 2வது கணவன் ஷாஜியின் மனைவி லிசியைக் கொலை செய்ய மாத்திரையில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இந்த கொலைக்கு அந்த ஷாஜியே உதவினாராம். ஆனால் பாவம்.. ஷாஜியையே போட்டு தள்ளிவிட்டு 3-வது கல்யாணத்துக்கு ரெடி ஆகி உள்ளார் ஜோலி.

 ஜான்சன்

ஜான்சன்

அந்த புது ஆள் பெயர் ஜான்சன். பிஎஸ்என்எல் அதிகாரியாக இருக்கிறாராம். ஆனால் அதுக்கு ஜான்சன் மனைவி ஒத்துக்கணுமே? அதனால அவரையும் போட்டுத்தள்ள முடிவு செய்துள்ளார் ஜோலி. அதாவது ஜோலியின் 2-வது கணவனையும், ஜான்சனின் மனைவியையும் போட்டுத்தள்ள பிளான் நடந்துள்ளது. இதற்கு அந்த ஜான்சனும் உடந்தை. இதையெல்லாம் கேட்ட போலீசார் இன்னமும் ஜோலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 கூடத்தாயி

கூடத்தாயி

ஒருமுறை விசாரணையின்போது, "கூடத்தாயியில் உள்ள வீட்டில் ஒரு முக்கியமான பொருளை மறைச்சு வெச்சிருக்கேன்" என்று ஜோலி சொன்னதுமே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அது என்ன பொருள் என்று போலீசார் கேட்டனர். "ஒன்னுமில்லை.. 6 பேரை கொன்னுட்டோமே.. ஒருவேளை போலீசில் சிக்கினால் நானும் அதே சயனைடு சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.. அதற்காகத்தான் எனக்குகொரு டப்பா சயனைடை வாங்கி அந்த வீட்டில் வெச்சிருக்கேன்" என்றார்.

 பறிமுதல்

பறிமுதல்

இதையடுத்து, போலீசார் ஜோலி சொன்ன அந்த வீட்டுக்கு ராத்திரியோடு ராத்திரியாக ஜோலியை அழைத்து கொண்டு ஓடினர். அந்த வீட்டில் சோதனையும் செய்தனர். அப்போதுதான் கிச்சனில் மற்ற பாத்திரங்களுக்கு நடுவே ஒரு சின்ன பாட்டிலில் சயனைடு இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த பாட்டிலுக்கு ஒரு துணியை போர்த்தி மூடப்பட்டு இருந்ததை பறிமுதல் செய்தனர்.

 சோதனைகள்

சோதனைகள்

இந்த சயனைடு பாட்டில்தான் போலீசாருக்கு கிடைத்த முக்கிய துருப்பு சீட்டாக இருந்தது. ஏனெனில் இதற்கு முன்பு ஜோலி வீட்டில் வெறும் சயனைடு இருந்த டப்பாக்கள்தான் கிடைத்தது. கொஞ்சமாக இருந்த சயனைடும் உறுதி செய்வதற்காக லேப்-புக்கு அனுப்பப்பட்டது. இந்த சமயத்தில் ஒரு டப்பா நிறைய சயனைடு கிடைத்தது போலீசாருக்கு பெரிய அளவில் இந்த கேஸில் உதவுகிறது.

English summary
2019 Year Ender crime stories: Kerala police are conducting a series of inquiries into Serial killer Jolly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X