For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

69வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 2வது முறையாக நாளை தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியேற்றுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் 2வது முறையாக டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்ற உள்ளார். செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்ற லெப். ராவ், லெப். பிரமோத் மற்றும் லெப். கமாண்டர் தீபிகா சவுத்ரி ஆகிய கடற்படை அதிகாரிகள் பிரதமர் மோடி கொடியேற்றுவதற்கு உதவுவார்கள்.

21 Gun salutes, 700 NCC cadets, Narendra Modi's second I-Day no less special

டெல்லி செங்கோட்டையின் லகோரி கேட் வந்திறங்கும் பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங், பாதுகாப்புத் துறை செயலாளர் மோகன்குமார் ஆகியோர் வரவேற்பர். அதன் பின்னர் ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை பிரதமருக்கு பாதுகாப்பு செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

இதைத் தொடர்ந்து முப்படைகளிலும் தலா 24 பேர் கொண்ட குழுவினர் பிரதமர் மோடிக்கு தேசியக் கொடி மேடைக்கு முன்பாக அணிவகுத்து மரியாதை செலுத்துவர். இந்த ஆண்டு இந்த கடற்படையின் கமாண்டர் யோகிந்தர் சர்மா தலைமையில் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். முப்படை தளபதிகளான தல்பீர்சிங், அரூப் ரா, ஆர்.கே. தெளவான் ஆகியோரும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பர்.

இதன் 871வது ரெஜிமெண்ட் படையின் 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றுவார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மொத்தம் 700 என்.சி.சி. மாணவர் படையினர் தேர்வு செய்யப்படுள்ளனர். அதேபோல் 45 அரசு பள்ளிகளைச் செரெந்த 3 ஆயிரத்து 500 மாணவிகள் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு தேச பக்திப் பாடல்களைப் பாடுவர்.

இதனிடையே செங்கோட்டைக்கு வரும் வழியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்துகிறார். அதனால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தரையில் மட்டுமின்றி, வானத்திலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஹெலிகாப்டர்களில் பறந்தபடி உன்னிப்பாக கண்காணிப்பார்கள். செங்கோட்டைக்கு மேலே விமானங்களோ, ஹெலிகாப்டர்களோ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வான்வழி தாக்குதலை முறியடிக்க, விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவு அதிரடிப்படை, மோப்ப நாய்ப்படை, வெடிகுண்டு கண்டறியும் படை ஆகியவையும் தயார்நிலையில் உள்ளன. ஒட்டுமொத்த டெல்லி நகரமுமே பலத்த பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

English summary
Prime Minister Narendra Modi is all set to unfurl the National Flag from the ramparts of the Red Fort on August 15, to mark the 69th Independence Day of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X