For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் கிர் வனப் பகுதியில் 3 மாதங்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம்

Google Oneindia Tamil News

ஜூனாகத்: குஜராத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளன. இதற்கு மலேரியா போன்ற நோயை உருவாக்கும் வைரஸ் தாக்குதலும் ஒரு காரணம் என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தின் கிர் வனப்பகுதியில் ஆசிய சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. இந்தியாவில் சிங்கங்கள் வாழும் ஒரே வனப்பகுதி கிர்தான்.

23 lions died in Gujarat’s Gir forest

கிர் வனப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வழக்கமாக சிங்கங்களிடையே சண்டை, முதுமை போன்ற காரணங்கள் முதன்மையாக சொல்லப்பட்டன.

ஆனால் சிங்கங்களை கொல்லும் கொடிய கெனைன் டிஸ்டெம்பர் என்கிற வைரஸ்தான் சிங்கங்களை தாக்கியது தெரியவந்தது. இதற்கான தடுப்பூசிகள் போடப்ப்ட்டு சிங்கங்கள் காப்பாற்றப்பட்டன.

23 lions died in Gujarat’s Gir forest

தற்போதும் கிர் வனப்பகுதியில் 3 மாதங்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் பரவி 2000க்கும் அதிகமான பன்றிகள் இறந்தன. அதற்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என விளக்கப்பட்டது.

"தேங்க்ஸ்டா நண்பா".. ஒரு கரடிக்கு இவ்வளவு அறிவா.. என்னா ஒரு டிசிப்ளின்.. செம வீடியோ!

இந்த நிலையில் கிர் வனப் பகுதியில் சிங்கங்கள் மரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மலேரியா போன்றவற்றை உருவாக்கும் வைரஸ் தாக்குதல்தான் இதற்கு காரணம் என காரணம் கூறப்படுகிறது.

English summary
23 Asiatic lions died in Gujarat' Gir Forerst with-in 3 months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X