For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி... இந்திய மருந்துகளுக்காக காத்திருக்கும் 25 நாடுகள்

Google Oneindia Tamil News

அமராவதி : இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் 19 தடுப்பூசிகளை பெறுவதற்காக 25 நாடுகள் காத்துக் கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சீரம் நிறுவனம் தற்போது அதிக அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வரகிறது. இலங்கை போன்ற நாடுகளுக்கு இலவசமாகவும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா அளித்து வருகிறது.

25 countries in queue for Made in India Covid-19 vaccine, says Jaishankar

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் 19 தடுப்பு மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் 25 நாடுகள் இந்திய மருந்துகளை பெற வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு கட்டங்களாக அந்த நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட உள்ளன என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஏழை நாடுகள், விலை மதிப்பிலான நாடுகள் மற்றும் நேரடியாக மருந்து தயாரிப்பு தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ள நாடுகள் என 3 பிரிவுகளாக மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையிலேயே 15 நாடுகளுக்கு இதுவரை மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.

''சோறுபோடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா''சோறுபோடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா""... கங்கனா ரனாவத் உருவப்படத்தை எரித்து பெண்கள் போராட்டம்!

மேலும் 25 நாடுகளுக்கு பல்வேறு நிலைகளாக அனுப்பப்பட உள்ளன. ஆனால் இன்று இந்தியா செய்தது உலக வரைபடத்தில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும். உலகின் மருந்தகமாக இந்தியானை மாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என்றார்.

ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்த கோவேக்சின், ஆக்ஸ்போர்ட் கோவிட் தடுப்பு பிரிவுடன் சீரம் இந்தியா இணைந்து தயாரித்த மருந்து என 2 மருந்துகளுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.

English summary
ndia has so far supplied Covid-19 vaccine to 15 countries and another 25 nations are the queue at different levels, says external affairs minister S.Jaishankar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X