For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகர் கையில் இருந்த 25 கிலோ லட்டு அபேஸ்... ஆந்திராவில் மர்மநபர்கள் துணிகரம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திராவில் பிரம்மாண்ட விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள லட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குஷைகுடா அருகே உள்ள ஏ.எஸ் ராவ் நகரில் ஸ்ரீநிவாச நகர் காலணி நலச்சங்கத்தினர் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடினர். இதற்காக பிரம்மாண்டமான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு அதன் கையில் 25 கிலோ எடையுள்ள லட்டு வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு கடந்த சில நாட்களாக பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

25 kg laddu stolen from Ganesh statue

இந்நிலையில் நேற்று சிலையின் அருகிலுள்ள கடைக்காரர் ராகேஷ் என்பவர், விநாயகர் சிலையின் கையைக் கவனித்த போது அதிர்ச்சி அடைந்து விட்டார். காரணம் அந்த சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள லட்டை காணவில்லை.

உடனடியாக இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விநாயகரின் கையில் இருந்த லட்டை திருடிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A 25 kilo laddu was stolen from a Ganesh pandal at Kushaiguda in Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X