For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

45 பேருடன் பயணித்த பஸ்.. திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 25 பேர் பலியான சோகம்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இந்த கோர விபத்து இன்று காலை 7:30 மணியளவில் நடந்துள்ளது. கேஷ்வானில் இருந்து கிஷ்த்வாருக்குச் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

25 killed as bus falls into gorge in Jammu and Kashmir

இதில் சம்பவ இடத்திலேயே, 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். பேருந்தில் சுமார் 45 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர்.
எனவே, எஞ்சியவர்கள் காயத்தோடு தப்பியுள்ளனர்.

இதுவரை 20 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஜம்மு, ஐ.ஜி.பி, எம் கே சின்ஹா, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது, என்றார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் இந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு, இரங்கல் தெரிவித்துள்ளனர்.

"கிஷ்த்வாரில் நடந்த துயர விபத்து குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைகிறேன். துக்கத்தில் உள்ளோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று மெஹபூபா முப்தி ட்வீட் செய்துள்ளார்.

ஓமர் அப்துல்லா வெளியிட்ட ட்வீட்டில், கிஷ்த்வார் பஸ் விபத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பலியாகியுள்ளார்கள் என்ற பயங்கர செய்தி வருகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவாக நலம் பெற பிரார்த்தனை" என்று தெரிவித்துள்ளார்.

English summary
At least 25 people were killed and seven injured when a mini bus carrying them fell into a gorge in Jammu and Kashmir's Kishtwar district early this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X