For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2018-ல் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.... ராணுவம் அதிரடி அட்டாக்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர் : 2018 ஆம் ஆண்டில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 250 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெற்றிக்கு பின்னணியில் இருப்பது, இந்திய பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் ஆல் அவுட்' பார்முலா

புதுப்பிக்கப்பட்ட உளவுத்துறை, உள்ளூர் ஆதரவு, தொழில்நுட்ப நுண்ணறிவு மற்றும் இராணுவத்தின் உறுதிப்பாடு என தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு பல அம்சங்கள் பலமாக இருந்தன.

அடையாளம் காண முடிந்தது

அடையாளம் காண முடிந்தது

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியான பர்ஹான் அனி இறந்ததை தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு ஆட்சேர்ப்பில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. அது 2016 ல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு நீண்டது. பாகிஸ்தானின் பள்ளத்தாக்கு பகுதிகள் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறியது. ஆட்சேர்ப்புக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும், ஒவ்வொருவரும் புதிய சமூக ஊடகங்களில் வெளியிடும் தகவல்கள் மூலம், புதிதாக, புதிதாக நியமிக்கப்பட்டவர்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. மேலும், தேசவிரோத சக்திகளை அழிக்கவும் இராணுவத்திற்கு உதவியாக இருந்தது.

250 தீவிரவாதிகள் அழிப்பு

250 தீவிரவாதிகள் அழிப்பு

தீவிரவாதிகளை அடையாளம் கண்ட பிறகு, இராணுவம் வெற்றிகரமாக ஹிட்-லிஸ்ட்டை தயார் செய்தது. அதனைத்தொடர்ந்து, திட்டம் தீட்டி இராணுவம் அதிரடி தாக்குதலில் இறங்கியது. ரகசிய தகவல்கள் மூலம் எல்லையில் ஊடுருவ முயன்றவர்கள் மற்றும் காஷ்மீரில் பதுங்கி இருந்தவர்கள் என இந்த ஆண்டில் மட்டும் 250 தீவிரவாதிகளுக்கு மேல் அழிக்கப்பட்டுள்ளனர் (டிசம்பர் 16, 2018 வரையிலான புள்ளிவிவரம்).

தீவிரவாதிகளின் தளபதிகள் காலி

தீவிரவாதிகளின் தளபதிகள் காலி

ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அன்சார் கஸ்வத்-உல் ஹிந்த் உள்ளிட்ட 18 தீவிரவாத அமைப்புகளின் உயர்மட்ட தளபதிகள் ஹிட் லிஸ்ட்டில் அடங்குவர். அல்டஃப் காஃப்ரோ, துவ்ஸெஃப் ஷேக், உமர் கஹானி, அபு ஹன்ஸலா என்ற நவீட் ஜேட் ஆகியோர் இந்த ஆண்டு இராணுவத்தின் புல்லட்களுக்கு இரையாகினர். மேலும், பள்ளத்தாக்கில் எஞ்சியிருந்த 250 தீவிரவாதிகளுக்கு மேல் சுட்டுத்தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்சேர்ப்பு குறைந்தது

ஆட்சேர்ப்பு குறைந்தது

இராணுவத்தின் அதிரடி நடவடிக்கைகளுக்கு தாக்குபிடிக்க முடியவில்லை என்பதால், கடந்த ஓராண்டாக தீவிரவாத ஆட்சேர்ப்பு என்பது குறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்றொரு புறம் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் நல்லுறவு நீடித்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2018 ம் ஆண்டில் மட்டுமல்லா எத்தனை ஆண்டுகள் வந்தாலும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதில் இராணுவம் தயாராக உள்ளது.

English summary
A little over 250 terrorists have been killed in Jammu and Kashmir in 2018 alone. The reason behind this of 'Operation All Out' by the Indian Security Forces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X