For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக சிறைகளில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 252 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநில‌ சிறைகளில் 14 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த 252 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனை கைதிகளை மாநில அரசு விடுதலை செய்யலாமா? இல்லையா? என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் உடல் நிலை, நன்னடத்தை விதிகளை அடிப்படையாக கொண்டும் வழக்கின் தன்மையையும் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்யலாம். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் விடுதலை கோரி அரசிடம் முறையிட்டு இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மாநில அரசு முன்வர வேண்டும் என உத்தரவிட்டது.

252 convicts released from various prisons in Karnataka

இதையடுத்து கர்நாடக அரசு 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியலையும், விடுதலை செய்ய வேண்டியவர்கள் பற்றிய பரிந்துரையையும் சமர்ப்பிக்குமாறு சிறைத்துறைக்கு உத்தர விட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை 260 ஆயுள் தண்டனை கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.

இதனை பரிசீலனை செய்த கர்நாடக அரசு 14 ஆண்டு களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள், கைதிகளின் உடல் நிலை, சிறையில் நடந்துகொண்ட முறை உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்தது. இதில் 252 கைதிகள் விடுதலை செய்ய தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு பெயர் பட்டியல் ஆளுநர் வஜூபாய் வாலாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இப்பட்டியலுக்கு ஆளுநர் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறைகளில் உள்ள 252 ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று மாலை 5.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

English summary
In all, 252 convicts were released from various prisons in Karnataka following green signal from Governor Vajubhai Vala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X