For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

26/11 மும்பை தாக்குதலுக்கு உதவிய "கறுப்பு ஆடு" அரசியல்வாதிகள் யார் யார்?

By Mathi
Google Oneindia Tamil News

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பை தாக்குதல் நடந்தது முதல் கடந்த 6 ஆண்டுகாலமாக நம்முன் ஒவ்வொருமுறையும் எழக் கூடிய கேள்வி ஒன்றும் இருக்கிறது.. 26/11 மும்பை தாக்குதலில் அரசியல் தலையீடு ஏதேனும் இருந்ததா? என்பதுதான் அந்த கேள்வி. இந்த தொடரின் 2வது அத்தியாயத்தில் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒட்டுமொத்த மும்பை தாக்குதல் சம்பவத்தையும் அலசி ஆராய்ந்த விசாரணை அதிகாரிகளிடம் பேசுகையில், உள்ளூர்வாசிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையில்லாமல் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்க முடியாது என்ற கோணமே முன்வைக்கப்படுகிறது.

மசிமர்நகர் ஜிபிஎஸ் பாயிண்ட்

மசிமர்நகர் ஜிபிஎஸ் பாயிண்ட்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தாக்குதல் நாளுக்கு முன்னரே தீவிரவாதிகள் வந்திருந்த நிலையில் இந்த மசிமர்நகர் பகுதியில் தடுத்திருக்க முடியும். தீவிரவாதிகளால் இந்த பகுதியில்தான் ஜி.பி.எஸ். கருவி கைவிடப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் நாம் அவர்கள் முன்னேறுவதை தடுத்திருக்கலாம். ஆனால் மும்பை கிரைம் பிராஞ்ச் அதிகாரிகளோ இந்த கோணத்தில் விசாரணையை அணுகவே இல்லை.

ஏன் இந்த கோணத்தில் அவர்கள் ஆராயவில்லை? மும்பை தாக்குதல் வழக்கானது ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு எதிரானதாக மட்டுமே அமைய வேண்டும் என்று மத்திய அரசு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் ஏதேனும் கொடுத்ததா?

பசீர் தலைமையிலான குழுவுக்கு ஒரு பெண்தான் உதவி செய்தார் என்பது விசாரணை அமைப்புகளிடம் ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. அனைத்து தீவிரவாதிகளும் மசிமர் நகர் பகுதிக்கு வந்து அங்கு 2 நாட்கள் தங்கியிருந்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவர் புர்கா அணிந்து கொண்டு தீவிரவாதிகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அந்தப் பெண் கள்ள டீசல் சந்தை வர்த்தகத்துடன் தொடர்புடையவரும் கூட. அந்த கள்ள டீசல் சந்தை வர்த்தகத்தை ஆராய்ந்தாலே 2008ஆம் ஆண்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த அந்த அரசியல்வாதி என்பது மிக எளிதாகவே தெரிந்துவிடும்.

'ரா' அதிகாரி பாலச்சந்திரன்

'ரா' அதிகாரி பாலச்சந்திரன்

இது குறித்து ரா முன்னாள் அதிகாரியும் 26/11 தாக்குதலில் போலீசார் பணி குறித்தும் விசாரணை நடத்திய வி. பாலச்சந்திரன் ஒன் இந்தியாவிடம் கூறுகையில், கள்ள டீசல் சந்தையோடு தொடர்புடைய அந்த குற்றவாளிக்கு 26/11 தாக்குதலில் தொடர்பு உள்ளது. மொத்தம் 10 தீவிரவாதிகள் மசிமர்நகரில் தங்கியிருந்ததாக எங்களது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தங்குவதற்கும் பின்னர் அவர்களுக்கு வழிகாட்டவும் ஒருநபர் உதவியாக இருந்தார். மசிமர்நகர் பகுதியில் வந்திறங்கிய தீவிரவாதிகள் தாங்கள் தாக்குதல் நடத்தும் இடங்களை நேரில் சென்று ஆய்வும் செய்திருக்கின்றனர். டீசல் ஊழலில் அரசியல் தொடர்புகள் இருப்பதால் அந்த கோணத்திலான விசாரணை நடத்தப்படவில்லை. இது தொடர்பாக தற்போதும் கூட உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறோம்.

பசீர்

பசீர்

அரசியல்வாதிகளுக்கு அப்பால் 26/11 தாக்குதலுக்கு உதவியவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியரான பசீர். இவர் ராணாவின் கூட்டாளி. இவர்தான் டேவிட் ஹெட்லியை மும்பை விமான நிலையத்தில் போய் வரவேற்றவர். ஹெட்லியின் பயணத்துக்கான ஆவணங்களை ராணா தயார் செய்ய மும்பைக்குள் ஹெட்லி 'உலா' வருவதற்கு உதவியது பசீர். குறிப்பாக நரிமண் அல்லது சபாத் ஹவுஸ் பற்றி ஹெட்லிக்கு விளக்கமாக கூறியதும் பசீர்தான். இங்குதான் இஸ்ரேலியர்கள் ஒன்று கூடும் இடம். இதனால்தான் பாகிஸ்தானியர்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர்.

பசீர் குறித்து முரண்பட்ட தகவல்களும் உண்டு. பசீர் கனடாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. ஹெட்லி, ராணாவுடன் நெருங்கிய தொடர்புள்ள பசீர், சிக்கிவிட்டால் பலருக்கும் சிக்கல் என்பதால் உடனே இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அரசியல் நெருக்கடிகள்..

அரசியல் நெருக்கடிகள்..

26/11 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பலருமே இந்த சம்பவம் தொடர்பாக பல அம்சங்களை கோணங்களை தொட்டுக் கூட பார்க்கவில்லை என்றே சுட்டிக் காட்டுகின்றனர். அன்றைய மத்திய அரசோ, விசாரணையை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதில்தான் அக்கறை செலுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மட்டுமே மத்திய அரசின் செயல்பாடுகள் இருந்தன. மகாராஷ்டிரா தொடர்புகள் குறித்து விசாரிக்க மறுக்கப்பட்டன. மகாராஷ்டிராவின் டீசல் ஊழல் என்பது தாவூத் இப்ராஹிமின் ஆசியுடன் நடைபெறுகிற ஒன்று என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. மகாராஷ்டிராவில் முன்பு ஆண்ட கட்சியின் மூத்த தலைவர் ஒருவருக்கு இதில் நெருங்கிய தொடர்பு உண்டு. அதேபோல் சர்ச்சைக்குரிய பெண்ணின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

அத்துடன் பயங்கரவாதிகளுக்கு உதவிய இந்த பெண் தொடர்பான தகவல்கள் பல அரசியல்வாதிகளை கிலி கொள்ளவும் கூட வைத்திருந்தது.

English summary
Every single year since 2008, we ask this question- was there political interference in the 26/11 probe? Speaking to a cross section of people who have put their efforts into decoding the entire incident, one gets the impression that an attack of such a magnitude could not have been staged without the hel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X