For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா- 7402; சசிகலா- 7403; சுதாகரன்- 7404; இளவரசி- 7405

By Siva
Google Oneindia Tamil News

Jayalalithaa is prisoner no: 7402
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. அவரது தோழி சசிகலாவுக்கு 7403 என்ற எண் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனை வழங்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பரப்பன அக்ரஹாராவில் உள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 ஆகிய எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கைதி எண், அறை குறித்த விவரங்களை சிறை அதிகாரிகள் ஜெயலலிதாவிடம் கன்னடத்தில் தெரிவித்துள்ளனர். பதிலுக்கு ஜெயலலிதாவும் அவர்களுடன் கன்னடத்தில் பேசியுள்ளார்.

English summary
Jayalalithaa, who got four years imprisonment in DA case, is prisoner no: 7402 in Parapana Agrahara prison in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X