For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி தீர்ப்பு: சசி தரூர் வரவேற்பு; ஆதாரம் இருந்தால் அப்பீல் செய்ய அன்னா யோசனை!

2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு குறித்து முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    பெரிதாக பேசப்பட்டு புஸ்வானமாகிப் போன 2ஜியின் கதை இதுதான்!- வீடியோ

    டெல்லி : 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தேசிய அளவில் பல்வேறு தலைவர்கள் தீர்ப்பு ஆதரித்தும், எதிர்த்தும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்துள்ளார் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி.

    நீதிபதியின் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,விற்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் ட்விட் செய்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்ச்சி

    காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்ச்சி

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், பா.ஜ.க.,வின் மோசமான முகத்திரை இந்த விஷயத்தில் கிழிந்துவிட்டது. இத்தனை நாள் அவர்கள் செய்த பொய்பிரச்சாரமும், காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்ச்சியும் இந்த தீர்ப்பின் மூலம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. எனவே, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    நீதித்துறையின் உண்மை முகம்

    இந்த தீர்ப்பின் மூலம் குற்றப்பழியை சுமந்து கொண்டிருந்தவர்கள் மீதான கலங்கம் துடைக்கப்பட்டு இருக்கிறது. நீதித்துறை தனது சிறப்பான பணியை ஆற்றி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    தேவையற்ற பழி சுமந்தோம்

    இந்த 2ஜி வழக்கின் தேவையற்ற பழியை தி.மு.க இரண்டு தேர்தல்களில் சுமந்து உள்ளது. இதனால் எங்கள் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொய் வழக்கில் இருந்து இப்போது நாங்கள் மீண்டு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளார் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

    அன்னா ஹசாரே கருத்து

    அரசிடம் ஊழல் நடந்ததற்கான வலுவான மற்றும் உண்மையான ஆதாரங்கள் இருந்தால், இந்த தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்யலாம் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.

    English summary
    2G Scam Verdict various Political Leaders expressed their Thoughts on the issue. DMK leader R.S Bharathi, Congress Leader Sasi Tharoor and Gandhian Activist Anna Hazare expressed their thoughts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X