For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 ஆண்டுகளாக நடைபெற்ற 2ஜி வழக்கில் வழக்கில் டிச.21-ல் தீர்ப்பு!

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை முறைகேடு வழக்கில் வரும் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி : 2ஜி அலைகற்றை முறைகேடு வழக்கில் வரும் 21-ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ கோர்ட்டில் 6 வருடங்களாக நடைபெற்று வந்தது.

 2G Spectrum scandal judgement will be announced on Dec 21

இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பது குறித்து இதுவரை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வரும் 21-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார்.

நாட்டையே பரபரப்புக்குள்ளாகிய இந்த முறைகேடு வழக்கின் தீர்ப்பை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். அன்றைய தினம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

English summary
Delhi CBI court declares judgement on Dec 21 in the issue of 2G Spectrum case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X