For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய எல்லையில் கொடிகட்டிப் பறக்கும் “ஹெராயின்” கடத்தல்- 3.5 கிலோ பறிமுதல்

Google Oneindia Tamil News

பக்வாரா: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லைப்பகுதியான உத்தர் தரிவால் அருகே ரூபாய் 7.5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 17.5 கோடி மதிப்பிலான ஹெராயினை இந்திய எல்லை பகுதியில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

3.5 kg heroin seized by BSF near India-Pakistan border

இது பற்றி எல்லை பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி. கட்டாரியா கூறும்பொழுது, "உத்தர் தரிவால் எல்லை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான நடவடிக்கையை உணர்ந்ததை அடுத்து எங்களது குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் 3.5 கிலோ கிராம் எடை உள்ள ஹெராயின் வகை போதை பொருள் அடங்கிய 4 பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அவை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்டவை என கூறினார். அதேவேளையில், பக்வாரா போலீசார் 255 கிராம் ஹெராயினை போதை பொருள் சத்தீந்தர் என்ற கடத்தல் காரனிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

அதன் மதிப்பு ரூபாய் 1.25 கோடி. இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
BSF today seized 3.5 kg of heroin smuggled from Pakistan having street value of Rs 17.5 crore near Uddhar Dhariwal border outpost here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X