For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி. சட்டசபை தேர்தல்... 3600 வேட்பாளர்களுக்கு டெபாசிட் கோவிந்தா!

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் பெற்றதால் அதில் போட்டியிட்ட 3,600 வேட்பாளர்கள் தாங்கள் செலுத்திய டெபாசிட்டை இழந்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதால் அங்கு போட்டியிட்ட 3,600 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 4,863 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

3,600 candidates lose their deposits in UP assembly election 2017

ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அங்கு பதிவாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற வேண்டும். அவ்வாறு பெறவில்லை எனில் வேட்பாளர் செலுத்திய டெபாசிட் தொகை வழங்கப்பட மாட்டாது.

அந்த வகையில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 76 சதவீதத்தினர், அதாவது 3,696 பேர் தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த சட்டசபை தேர்தலைக் காட்டிலும் குறைவாகும்.

English summary
3,600 contestants who were contested in UP election 2017 have lost their deposits which was paid at the nomination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X