For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 3 கோடியுடன் எஸ் ஆன வங்கி மேலாளர்.. சாக்குப் பை நிறைய பணத்துடன் திரும்பி வந்தார்!

Google Oneindia Tamil News

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ. 3 கோடி பணத்துடன் தலைமறைவான வங்கி மேலாளர் ஒருவர், 12 நாட்கள் பரபரப்புக்குப் பின்னர் அந்தப் பணத்தை சாக்குப் பையில் போட்டுக் கட்டி எடுத்து வந்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சரணடைந்தார்.

3 Crores in Cash Returned in Sacks to Cops

நான்கு சாக்குப் பை நிறைய அந்தப் பணத்தை அவர் கொண்டு வந்திருந்தார். இதையடுத்து வங்கி ஊழியர்களை வரவழைத்த போலீஸார் பணத்தை எண்ண உத்தரவிட்டனர். ஆறு மணி நேரம் செலவிட்டு ஊழியர்கள் பணத்தை எண்ணி முடித்தனர்.

அந்த மேலாளரின் பெயர் சுதர்ஷன் ஜோஷி. இவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவரது கிளையிலிருந்து ஜனவரி மாதத் தொடக்கத்தில் ரூ. 3 கோடி காணாமல் போனது. அதன் பின்னர் ஜோஷியும் தலைமறைவாகி விட்டார். தற்போது அவர் ஹத்ரா மாவட்ட போலீஸாரிடம் சரணடைந்துள்ளார்.

அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் கொண்டு வந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ 30,000 குறைவாக இருந்தது தெரிய வந்தது.

English summary
A bank manager who had been missing for 12 days stunned a police station in Madhya Pradesh by arriving with four sacks full of money. Nearly three crores. In cash. Staffers from the state-run bank where he worked were summoned to count the currency. There was so much of it that it took them six hours to do the math. The manager, Sudarshan Joshi, was suspended late in January after three crores went missing from the branch he ran. He then disappeared.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X