For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாகிர் நாயக்கின் என்ஜிஒ லைசன்சை புதுப்பித்தது யார்... 3 உள்துறை அதிகாரகள் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: மத போதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் என்ஜிஒவின் எப்சிஆர்ஏ என்று சொல்லப்படும் வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவதற்கான லைசன்ஸ் புதுபிக்கப்பட்டுள்ளது. ஜாகீர் நாயக் மீது தீவிர விசாரணை நடைபெற்று வரும் போது எப்படி என்ஜஒ லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்ததையொட்டி, உள்துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

3 Home Ministry Officials Suspended Over Renewal of Zakir Naik’s NGO Licence

கடந்த ஜுலை மாதம் வங்க தேசம் டாக்காவில் நடைபெற்ற தீவரவாதத் தாக்குதலில் 22 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவரும் பலியானார். இந்திய மத போதகர் ஜாகீர் நாயக்கின் சொற்பொழிவைக் கேட்டுத்தான் அவர் தீவிரவாதியாக மாறினார் என்று வங்கதேச அரசு கூறியது.

இதனையடுத்து, ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகளுக்கு கடுமையான நெருக்கடிகள் உருவாகின. மேலும், மகாராஷ்டிர அரசும் மத்திய அரசும் ஜாகீர் நாயக் மற்றும் அவரது என்ஜிஓ நிறுவன நடவடிக்கைகளை தீவிரமாக காண்காணித்து வருகின்றன. மேலும் ஜாகீர் நாயக் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் தயாரிக்கப்பட்ட அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜாகீர் நாயக் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், அவர் நடத்தி வரும் என்ஜிஓவின் எப்சிஆர்ஏ லைசன்ஸ் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகள் தீவிர கண்காணிப்பலும், விசாரணையிலும் இருக்கும் இருக்கும் போது, எப்படி அவர் நடத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற என்ஜிஓ நிறுவனத்திற்கு லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இணை செயலாளர் ஜிகே திவேதி, மற்றும் இரு துணை செயலாளர்கள் என 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Three officials of the Union Home Ministry were removed on Thursday after it was found that the Foreign Contribution Regulation Act license of a non-profit headed by Salafi preacher Zakir Naik
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X