For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவலிங்கத்துக்கு ரத்த அபிஷேகம்.. கொடூரமாக 3 பேர் நரபலி.. ஆந்திர வனப்பகுதியில் ஒரு ஷாக் சம்பவம்

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திரத்தில் ஒரு வனப்பகுதியில் பெண்கள் உள்பட 3 பேர் புதையலுக்காக நரபலி செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தின் தானக்கல்லுவில் உள்ள கொர்ட்டிகோட்டா கிராமம். இங்குள்ள வனப்பகுதியில் பழமையான சிவன் கோயில் உள்ளது. இங்கு அந்த கோயிலை புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் சிவன் கோயில் அருகே 2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீஸாருக்கு புகார் அளித்தனர்.

20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு 20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு

விசாரணை

விசாரணை

தகவலறிந்து வந்த தானக்கல்லு போலீஸார் 3 பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

போலீஸார் நடத்திய விசாரணையில் சிவன் கோயிலில் உள்ள லிங்கத்திற்கு மனித ரத்தத்தால் அபிஷேம் செய்தால் புதையல் கிடக்கும் என்ற மூடநம்பக்கையின் காரணமாக இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ரெட்டி

ரெட்டி

பழமையான கொர்ட்டிகோட்டா சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக கூறுப்படுகிறது. இவர்கள் 3 பேரும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாாம் என தெரிகிறது. அப்போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஹனுமம்மா, சத்யலட்சுமி, சிவராம் ரெட்டி என தெரியவந்துள்ளது.

பலி

பலி

கோயில் கட்டுமான பணியில் இருந்த அவர்கள் மூவரும் வேலை முடிந்த பிறகு அங்கேயே படுத்துறங்கியபோது இந்த கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
3 killed for human sacrifice in Andhra forest area. Their blood was performed as abhishegam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X