For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணியா? 3 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பீகாரில் ஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகாததை அடுத்து நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

பீகாரில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பீகார் மாநில பாஜக உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.

 3 member committee has been constituted over Nitish-BJP alliance: Sushil Kumar Modi

அம்மாநில பாஜக நிர்வாகிகள் நிதிஷ் குமாருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஜக எம்.எல்.ஏ.க்களுடனும் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி, பீகாரில் இடைக்கால தேர்தல்களை நாங்கள் விரும்பவில்லை என்றும், தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடைய பதவி காலத்தில் பணியாற்ற வேண்டும்.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்களிடம் பேச மூன்று நபர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். மத்திய பாஜக தலைமையிடம் இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்படும் . மேலும், 3 பேர் கொண்ட குழுவை அமைத்து நிதிஷுக்கு ஆதரவளிப்பதா என ஆலோசிக்கப்படும்.

நிதிஷ் குமார் இவ்விவகாரத்தில் சமரசம் செய்துக்கொள்ளாததில் நாங்கள் பெருமை அடைகிறோம், ராஷ்டீரிய ஜனதா தளம் முன்னதாக அவர் மண்டியிடவில்லை என கூறியுள்ளார் சுஷில் மோடி.

English summary
3 member committee has been constituted for making the future plan of action: Sushil Kumar Modi, BJP .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X