For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் மாலை அணிந்து ஐய்யப்பன் தரிசனம் செய்த 3 நியூசிலாந்து பெண்கள்!

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் ஐய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி சுவாமி தரிசனம் செய்தனர்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சிசிலி, மரியம், பியா ஆகிய 3 பெண்கள் சுற்றுலா பயணத்தை முன்னிட்டு கேரளா வந்தனர்.

அவர்கள் 3 பேரும் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலை சுற்றுலா மையத்தில் தங்கி இருந்தனர்.

ஐய்யப்பன் சன்னிதானம்:

ஐய்யப்பன் சன்னிதானம்:

இந்த நிலையில் அவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த குழுவினர், சபரிமலை ஐய்யப்பன் கோவில் குறித்து அந்த பெண்களிடம் விளக்கி கூறினர்.

தரிசிக்க ஆர்வம்:

தரிசிக்க ஆர்வம்:

உடனே அவர்கள்,இந்தியாவின் பிரபல ஆன்மிக தலமாக விளங்கும் சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிக்க ஆர்வம் கொண்டனர். கோவிலின் விதி முறைகள் குறித்து மூவரும் கேட்டறிந்தனர்.

இருமுடி கட்டி பயணம்:

இருமுடி கட்டி பயணம்:

பின்னர், கன்னியாகுமரியில் வாங்கி வந்த துளசி மாலையை அணிந்து கொண்டு சபரிமலை செல்லும் வழியில் பம்பையில் இருமுடி கட்டிக்கொண்டு நடந்தே சபரிமலைக்கு சென்றனர்.

தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு:

தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு:

பெண்கள் 3 பேரும் பதினெட்டு படிகள் வழியாக சன்னிதானத்திற்கு சென்று கோவிலை 3 முறை சுற்றி வந்து, சாமி தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்ததோடு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.

English summary
3 newzland women followed sabarilama rules and visit to Ayyappan temple through 18 steps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X