For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரமடையும் துப்பாக்கி சூடு.. அசாமில் 3 பேர் பலி.. 28 பேர் படுகாயம்.. போராட்டத்தில் பரபரப்பு!

அசாமில் நடாத்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 13-12-2019 | Morning News | oneindia tamil

    கவுகாத்தி: அசாமில் நடாத்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருண்சலப்பிரதேசம்.

    இந்த 7 மாநிலங்களில்தான் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் நேற்று இந்த மசோதா சட்டமானது.

    அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம்.. குடியுரசுத் தலைவர் ஒப்புதல் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம்.. குடியுரசுத் தலைவர் ஒப்புதல்

    உச்சம்

    உச்சம்

    இந்த நிலையில் இந்தப்போராட்டம் தற்போது அசாமில் உச்சம் பெற்றுள்ளது. அங்கிருக்கும் கவுகாத்தியில்தான் மக்கள் அதிக அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கியமாக அங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்புதான் இதில் முன்னிலை வகிக்கிறது. மற்ற பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

    அசாம் எப்படி

    அசாம் எப்படி

    இதனால் அசாமில் மொத்தமாக இணையம் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 3 நாட்களாக இணையம் இல்லை. தொலைபேசி இணைப்புகளும் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தரைவழி, வான்வழி மற்றும் ரயில்வே போக்குவரத்து அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    துப்பாக்கி சூடு

    துப்பாக்கி சூடு

    இந்த போராட்டத்தின் போது போலீசார் அங்கிருந்த மக்களை கலைந்து செல்ல வைப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலையே அங்கு போலீசார் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    3 பேர் பலி

    3 பேர் பலி

    நேற்று வானத்தை நோக்கி சுட்ட போலீசார் இன்று மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீஸ் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். அதேபோல் இதில் மொத்தம் 28 பேர் பல்வேறு இடங்களில் காயப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    என்ன கைது

    என்ன கைது

    இந்த போராட்டம் காரணமாக இதுவரை மொத்தம் 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பல இளைஞர்கள் அங்கு இருக்கும் விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அங்கு போராட்டம் அதிகமாகிக் கொண்டே வரும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    2 people shot dead by police yesterday in North East protest against Citizenship Amendment Bill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X