For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்முவில் பேய் மழை, திடீர் வெள்ளம்: பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 3 குழந்தைகள் பலி

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீர் என்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பள்ளிக் குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் வியாழக்கிழமை திடீர் என்று பேய் மழை பெய்தது. இதையடுத்து அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படோட்

பகுதியை சேர்ந்த ராகேஷ் குமார்(14), பாயல்(13), சிவாலோ தேவி(5) ஆகிய 3 குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

3 School Children Washed Away After Flash Floods In J&K's Ramban District

வீட்டிற்கு நடந்து வரும் வழியில் அவர்கள் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் 3 பேரையும் தேடினர். இந்நிலையில் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 3வது குழந்தையின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

திடீர் வெள்ளத்தால் படோட்டில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பனிச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை பனியால் மூடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் பனியை அகற்றும் வேலைகள் நடந்து வருவதாக ராம்பன் மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் அஜாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

English summary
Heavy rain and cloud burst triggered flash floods in Jammu in which 3 school kids got washed away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X