For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி... தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 4 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர் : காஷ்மீரின் எல்லையில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளை ரீணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர், இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

குபுவாரா மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நவ்காம் செக்டாரில் இன்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் நுழைய முயன்ற தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிந்த இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

 3 terrorists killed at Jammu LOC who treid to enter into India with heavy weapons

இதனையடுத்து இருதரப்பிடையே நேற்று இரவு கடுமையான சண்டை தொடங்கி உள்ளது. சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 15 நாட்களில் பாகிஸ்தான் உதவியுடன் 4 முறை இந்தியாவிற்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி செய்து உள்ளனர். இந்திய ராணுவம் அதனை முறியடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் எல்லையில் இருமுறை பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி சம்பவங்கள் நடந்து உள்ளது.

நவ்காம் செக்டாரில் இருந்து கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி ராணுவ ஆப்ரேஷன் தொடர்ந்து நடக்கிறது என்றே தெரிவித்து உள்ளது. இதில் இன்று காலையில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 26-ம் தேதி எல்லையில் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த உரி செக்டாரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை படையை சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு மறுநாள் அதே உரி செக்டாரில் ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian army officials told that three heavily-armed terrorists were killed in an encounter in Jammu and Kashmir's Kupwara district on Wednesday night as the Army foiled the third major infiltration bid
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X