இதயமே வெடிக்கிறது.. சுட்டு கொல்லப்பட்ட தாத்தா.. உடம்பு மீது படுத்து எழுப்பும் 3 வயது பேரன்.. கொடுமை
ஸ்ரீநகர்: பார்க்கும்போதே நெஞ்சு வெடிக்கிறது. அப்படி ஒரு கோரமான காட்சி இது. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் சிக்கி பரிதாபமாக ஒரு அப்பாவி முதியவர் பலியானார். அந்த முதியவரின் பேரன், தாத்தா உடம்பு மீது படுத்து அழுது புலம்பிய காட்சி மனதை பதற வைக்கிறது.
காஷ்மீன் சோப்போர் பகுதி அது. அங்குதான் என்கவுண்டர் நடந்தது. தீவிரவாதிகளின் நிலையை குறி வைத்து பாதுகாப்புப் படையினர் சரமாரியாக சுட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்த சண்டையின்போது துப்பாக்கிக் குண்டு 60 வயது அப்பாவி முதியவர் மீது பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சண்டை நடந்தபோது அந்தப் பகுதி வழியாக தனது பேரனுடன் வந்து கொண்டிருந்தார் முதியவர். அப்போதுதான் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் பலியாகி விட்டார். தனது கண் முன்பாகவே தாத்தா ரத்த வெள்ளத்தில் பிணமாக விழுந்ததைப் பார்த்த 3 வயது பேரனுக்கு ஒன்றும் புரியவில்லை. சலனமற்ற அந்த உடலைப் பார்த்து அருகில் உட்கார்ந்து கதறி அழுகிறான்.
பேட்டி என்ற பெயரில் அமைச்சர்கள் "பிதற்ற" வேண்டாம்.. திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சாடல்
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து வந்து அந்த சிறுவனை அங்கிருந்து மீட்டு அருகில் இருந்த பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால் தனது தாத்தாவின் உடலைப் பார்த்து அந்த சின்னப் பையன் அடக்கமுடியாமல் அழுதபடியே இருக்கிறான். பிறகு ஒரு போலீஸ்காரர் அந்த சிறுவனை வாஞ்சையுடன் தனது மடியில் உட்கார வைத்து ஆறுதல் சொல்கிறார். பிறகு அந்த இடத்தை விட்டு கூட்டிச் செல்கிறார்.
இதயமே வெடித்து விடுவது போல இருக்கிறது இதுதொடர்பான புகைப்படத்தைப் பார்க்கும்போது.