For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் பரிதாப பலி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பிஆர்டி மருத்துவமனையில் கடந்த இரு நாடுகளில் 30 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழநத் தகவல் வெளியாகியுள்ளது.

வினியோகஸ்தருக்கு ரூ.66 லட்சம் பாக்கியை அரசு செலுத்தாததால், ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்கப்பட்டதாகவும் அதனால் இந்த விபரீதங்கள் நடந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 children die due to lack of oxygen supply in hospital in Gorakhpur

இரு நாட்கள் முன்புதான் இந்த மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தியிருந்தார். ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து அவரது கவனத்திற்கு எப்படி வராமல் போனது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கோரக்பூர் என்பது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் லோக்சபா தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பிஆர்டி மருத்துவமனை இதுபோன்ற மோசமான நிர்வாகத்திற்கு பெயர் பெற்றது. கடநத் வருடம், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் encephalitis நோயால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 920 குழந்தைகளில் 224 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

English summary
30 children have lost their lives due to encephalitis in last 48 hours at a hospital in Uttar Pradesh’s Gorakhpur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X