For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் 2-வது நாளாக மமதா பேரணி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று 2-வது நாளாக மக்களை அணிதிரட்டும் பேரணியை நடத்தினார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணியை மமதா பானர்ஜி நேற்று நடத்தினார். இதில் பேசிய மமதா பானர்ஜி, நான் உயிருடன் இருக்கும்வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த முடியாது.

30 people have committed suicide due to the fear of NRC, Says Mamata Banerjee

அதையும் மீறி நீங்கள் அமல்படுத்த நினைத்தால் என் சடலத்தை தாண்டிதான் அது நடக்கும் என ஆவேசமாக கூறினார். இந்நிலையில் இன்று 2-வது நாளாக கொல்கத்தாவில் மமதா பானர்ஜி மீண்டும் பேரணியை நடத்தினார்.

ஜாதவ்பூர் முதல் ஜாடு பாபு பஜார் வரையில் மமதா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் பேசிய மமதா பானர்ஜி, வன்முறையில் ஈடுபடுவோரின் உடைகளை வைத்தே யார் என்று அடையாளம் தெரிந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொப்பி அணிந்திருப்பதாலேயே ஒருவர் முஸ்லிம் ஆகிவிட முடியாது. எங்கே நான் அணிந்திருக்கும் உடையை வைத்து என்னை யார் என்று சொல்லுங்கள்? எங்களது ஒரே முழக்கம், என்.ஆர்.சியும் குடியுரிமை சட்ட திருத்தமும் வேண்டாம் என்பதுதான்.

செருப்பு.. மண்ணெண்ணெய் கேன்.. பாதி எரிந்த நிலையில் பெண் உடல்.. விராலிமலை அருகே பயங்கரம்!செருப்பு.. மண்ணெண்ணெய் கேன்.. பாதி எரிந்த நிலையில் பெண் உடல்.. விராலிமலை அருகே பயங்கரம்!

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு அஞ்சி 30 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பது? நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்க மண்ணில் இந்த இரண்டையும் அனுமதிக்கவே மாட்டேன் என்றார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee said that 30 people have committed suicide due to the fear of NRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X