For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை டூ ஐஸ்வால்:மிசோரம் இளைஞர் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி 3000 கி.மீ ஓட்டி சென்று ஒப்படைத்த ஓட்டுநர்

Google Oneindia Tamil News

ஐஸ்வால்: சென்னையில் மரணமடைந்த மிசோரம் மாநில இளைஞர் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி 3,000 கி.மீ. தொலைவில் உள்ள அம்மாநில தலைநகர் ஐய்ஸ்வாலில் உறவினர்களிடம் ஓட்டுநர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    மிசோரம் இளைஞர் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி 3,000 கி.மீ ஓட்டி சென்று ஒப்படைத்த ஓட்டுநர்

    கொரோனா பரவுவதைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த வாரம் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் விவியன் லால்ரெம்சங்கா (வயது 28) மாரடைப்பால் காலமானார்.

    300 KM Journey...Heroic story of Mizoram youth during Coronavirus lockdown

    அவரது உடலை உடனடியாக மிசோரம் தலைநகர் ஐய்ஸ்வாலுக்கு கொண்டு செல்ல எந்த ஒரு பொது போக்குவரத்தும் இல்லை. ரயில், விமான சேவைகள் தற்போதைக்கு இல்லை என்பது தெளிவான ஒன்று.

    இந்நிலையில்தான் சென்னையில் உள்ள மிசோ வெல்பேர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு அதிரடியான முடிவை எடுத்தனர். சென்னையில் இருந்து மிசோரம் மாநிலத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் விவியனின் உடலை சாலை மார்க்கமாகவே எடுத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

    இந்த ஆம்புலன்ஸில் மிசோரமைச் சேர்ந்த ரபேல் என்ற இளைஞரும் பயணித்தார். இன்று பிற்பகல் இந்த ஆம்புலன்ஸ் வாகனம் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை சென்றடைந்தது.

    மரணித்தவர் உடலுடன் சென்ற ஆம்புலன்ஸை கண்டதும் அங்கே கூடியிருந்த மக்கள் கை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயலைப் பாராட்டி ஆடைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    English summary
    A youth from Mizoram has ed a heroic story during the lockdown in the country, when he has set an journey by ambulance from Chennai to Aizawl.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X