For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிட்டு 22 தமிழர்கள் விடுதலை..அங்கிட்டு செம்மரம் வெட்ட வந்ததாக 35 பேர் கைது- ஆந்திரா அட்டூழியம்!

ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி 35 தமிழர்களை ஆந்திர போலீசார் கைத செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்ட சென்றதாக 35 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் சிலர் பண ஆசைக் காட்டி ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர். அவர்களை கைது செய்யும் ஆந்திர காவல்துறை சிறையிலடைத்து சித்ரவதை செய்து வருகின்றனர்.

35 Tamils arrested in Andra pradesh for coming to cut Red wood

இந்நிலையில் கடப்பா சென்ற 35 தமிழர்களை செம்மரம் வெட்ட வந்ததாக கூறி அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 20 தமிழர்களை அம்மாநில போலீசார் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுதான் 22 தமிழர்களை விடுதலை செய்தது ஆந்தி அரசு. இந்த நிலையில் 35 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

English summary
Andra pradesh police had been arrested 35 tamils in kadappa for coming to cut red wood. They all are from salem district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X