For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை.. சுஷ்மா சுவராஜ் பரபரப்பு

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஈராக்கில் 39 இந்தியர்கள் படுகொலை : சுஷ்மா சுவராஜ்- வீடியோ

    டெல்லி: ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றுதான் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்ட 39 பேரின் உடலும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.

    இவர்களின் உடல் விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. இந்த தகவல் நாடாளுமன்றத்தில் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

    காணாமல் போனவர்கள்

    காணாமல் போனவர்கள்

    கடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது. அப்போது அவர்கள் அனைவரும் ஈராக்கின் மொசூல் நகரில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு இருக்கு ஜெயிலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    தாக்குதல்

    தாக்குதல்

    அந்த பகுதியில் தீவிரவாதிகள் மோசமாக தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் அந்த ஜெயிலும் ஒரு மாதம் முன்பு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் அங்கு இருந்த 39 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருந்து வந்தது.

    சுஷ்மா மறுப்பு

    சுஷ்மா மறுப்பு

    இவர்களின் நிலை என்ன என்று பதிலளிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுத்து வந்தார். இந்த நிலையில் 39 பேரும் இறந்துவிட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அந்த ஜெயில் கட்டிடம் தகர்க்கப்பட்ட போதே இவர்கள் மரணம் அடைந்துவிட்டார்கள் என்றுள்ளார்.

    பரிசோதனை

    பரிசோதனை

    இவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ரத்த மாதிரிகளை வைத்து இவர்களது உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் உடலை மீட்க இந்தியாவில் இருந்து விமானம் அனுப்பப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

    English summary
    External Affairs Minister Sushma Swaraj in Rajya Sabha said 39 Indians who were kidnapped in Iraq have died.As a mark of respect to the 39 Indians killed in Iraq, Chair calls for 2 minutes silence in Rajya Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X