For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிப்பூரில் காலையில் குலுங்கிய கட்டிடங்கள்..4.0 ரிக்டர்..உ.பி, ஹரியானா வரை உணரப்பட்ட நிலநடுக்கம்

மணிப்பூரில் காலை நேரத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

4.0 magnitude Earthquake strikes Manipur feels parts of UP, Haryana

10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பிற்காக சிலர் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம், உயிர் சேதம் குறித்து இதுவரைக்கும் எந்த விபரங்களும் வெளியாகவில்லை.

ரெடியா? கைநிறைய சம்பளம்.. டிகிரி முடித்தாலே போதும்.. அழைக்கும் இந்திய வனப்பணி.. சூப்பர் வாய்ப்பு! ரெடியா? கைநிறைய சம்பளம்.. டிகிரி முடித்தாலே போதும்.. அழைக்கும் இந்திய வனப்பணி.. சூப்பர் வாய்ப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் இது போன்ற நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வழக்கமான ஒன்று. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொய்ராங் பகுதியில் இன்று காலை 10.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் மாநிலத்தில் 1988ஆம் ஆண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 என பதிவானது.

English summary
A moderate earthquake was felt in Manipur's Ukrul town today at 6.14 am. It is recorded as 4.0 on the Richter scale. Buildings shook and people took shelter in the streets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X