For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்.. 4 இந்திய வீரர்கள் மரணம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்மு காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்..வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் பாக்கிஸ்தான் ரேஞ்சர்ஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை (BSF) சேர்ந்த 4 ஜவான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும், மூன்று பேர் காயமடைந்தனர்.

    ராம்கார் பகுதியில் பாபா சம்லியால் அவுட்போஸ்ட்டை இலக்கு வைத்து பாக்கிஸ்தான் ரேஞ்சர்ஸ் தாக்குதலை நடத்தியுள்ளனற்.

    4 BSF Jawans Killed in Pakistan Firing in Jammu and Kashmirs Samba

    இந்த தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்னிஷ் குமார், ஏஎஸ்ஐ ராம் நிவாஸ், ஏஎஸ்ஐ ஜடேந்தர் சிங் மற்றும் கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

    காயமடைந்த மேலும் 3 வீரர்கள் ஜம்மு நகரில் சத்வாரியில் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

    ராம்கர் மாவட்டத்தில் உள்ள பாபா சம்லியால் ஆலயத்தில் ஆண்டுதோறும் 'உர்ஸ்' (திருவிழா) நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழா நெருங்கியுள்ள நிலையில், பாக்கிஸ்தானின் யுத்த நிறுத்த அத்துமீறல் நடந்துள்ளது.

    பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலில் உர்ஸ் நேரத்தில் பாக்கிஸ்தான் வீரர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். வருடாந்திர திருவிழா ஜூன் 26ம் தேதி நடைபெற உள்ளது.

    English summary
    The three junior officers and a Constable were killed in unprovoked shelling and firing by Pakistan Rangers targeting Baba Chamliyal outpost in the Ramgarh Sector on Wednesday morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X