For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய பெண்மணிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சாரிய, ஐசிஐசி வங்கியின் நிர்வாக இயக்குநரான சந்தா கோச்சார், பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தார் ஷா, இந்துஸ்தான்டைம்ஸ் நிறுவன தலைவரும், எடிட்டோரியல் தலைவருமான சோபனா பார்தியா ஆகியோர் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

4 Indians in Forbes 100 Most Powerful Women list

13வது ஆண்டாக இந்தப் பட்டியலை போர்ப்ஸ் வெளியி்ட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோடீஸ்வரிகள், தொழிலதிபர்கள், நிதித்துறையினர், மீடியாவில் உள்ளோர், அரசியல் தலைவர்கள் என பல தரப்பட்டவரும் இடம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் கூறியுள்ளது.

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்வாகியுள்ளார் ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல். இந்த பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து அரசியல்வாதியான நிக்கோலா ஸ்டர்ஜியன் 50வது இடத்தில் உள்ளார்.

இந்திய பெண்மணிகள்

இந்த பட்டியலில் 25வது இடத்தில் ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சாரிய இடம் பிடித்துள்ளார். ஐசிஐசி வங்கியின் நிர்வாக இயக்குநரான சந்தா கோச்சார் 40வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

மசூம்தார் ஷா

77வது இடத்தில் பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தார் ஷாவும் உள்ளனர். 93வது இடத்தில் இந்துஸ்தான்டைம்ஸ் நிறுவன தலைவரும், எடிட்டோரியல் தலைவருமான சோபனா பார்தியாவும் உள்ளனர்.

ஏஞ்சலா மெர்க்கல்

இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் ஜெர்மன் சான்சலர் ஏஞ்செலா மெர்க்கல் ஆவார். இவர் கடந்த 6 வருடமாக முதலிடத்தில் நீடித்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 6 முறை இந்த பட்டியலில் இவர் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கு தேர்வாக வாய்ப்பு உள்ள ஹிலாரி கிளிண்டன் 2வது இடத்தில் இருக்கிறார். அவருடன் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவரான ஜேனட் எல்லன்2வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மெலிண்டா கேட்ஸ்

4வது மெலிண்டா கேட்ஸ் இடம் பெற்றுள்ளார் இவர் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸின் மனைவி ஆவார். 5வது இடத்தில் ஜெனரல் மோட்டோர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான மேரி பர்ரா ஆகியோர் உள்ளனர்.

மிஷல் ஒபாமா - இந்திராநூயி

13வது இடத்தில் மிஷல் ஒபாமா இருக்கிறார். இந்திய வம்சாவளியச் சேர்ந்த பெப்சி நிறுவன தலைமை செயலதிகாரி இந்திரா நூயி 14வது இடத்தில் இருக்கிறார்.

ஆங் சென் சூகியி

மியான்மர் நாட்டின் தலைவி ஆங் சென் சூகி இந்தப் பட்டியலில் 26வது இடத்தில் பிடித்துள்ளார். இவர் இங்கிலாந்து ராணியை விட சக்தி வாய்ந்தவராக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.

இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்துக்கு இந்தப் பட்டியலில் 29வது இடமே கிடைத்துள்ளது எந்பது குறிப்பிடத்தக்கது. அவரை விட அமெரிக்க சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பட்டியலில் 23வது இடத்தில் இடம்பெற்றுள்ளனர்.

English summary
The Indian businesswomen on the 13th edition of the annual rankings include State Bank of India Chairman Arundhati Bhattacharya (ranked 25); Chanda Kochhar (40), MD and CEO, ICICI Bank; Kiran Mazumdar-Shaw (77), Chairman and MD of Biocon; and Shobhana Bhartia (93), Chairperson and Editorial Director, HT Media Ltd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X