For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது என் மகனுக்காக.. சிஏஏ போராட்டத்தில் பலியான 4 மாத குழந்தை.. ஒரே வாரத்தில் மீண்டும் போராட வந்த தாய்

டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டத்தில் கலந்து கொண்டு வந்த 4 மாத சிறுவன், காய்ச்சல் வந்து பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டத்தில் கலந்து கொண்டு வந்த 4 மாத சிறுவன், காய்ச்சல் வந்து பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு நடக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லியில் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பெண்கள் எப்படி

பெண்கள் எப்படி

இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும். ஷாஹீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை இங்கு தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் நடக்கும் சிஏஏ போராட்டத்திற்கு இது மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தை பெண்கள்தான் நடத்தி வருகிறார்கள். தினமும் ஷாஹீன் பாக் பகுதியில் 2 லட்சம் பேர் வரை இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

"என்னை விட்டுடு.. கல்யாணமாயிடுச்சு... குழந்தையும் இருக்கு" கெஞ்சிய டீச்சரை உயிருடன் கொளுத்திய கொடுமை

குடும்ப பெண்கள்

குடும்ப பெண்கள்

இந்த போராட்டத்தை குடும்ப பெண்கள்தான் முன்னின்று நடத்தி வருவது. டெல்லியின் மிக கடுமையான குளிருக்கும் இடையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி சிஏஏ போராட்டத்தில் எல்லோரின் செல்லப்பிள்ளை என்றால் அது முகமது ஜஹான்தான். 4 மாதமே வயது நிரம்பிய முகமது ஜஹான், அங்கு போரட்டம் செய்யும் மக்களுக்கு செல்லப்பிள்ளை. முகமது ஆரிப் மற்றும் நசியாவின் மகனான முகமது ஜஹான், டிவியில் கூட வந்திருக்கிறான்.

குழந்தை

குழந்தை

கையில் தேசிய கொடியை பிடித்துக் கொண்டு, கன்னத்தில் தேசிய கொடியை வரைந்து கொண்டு முகமது ஜஹான் நிற்கும் புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலானதும் குறிப்பிடத்தக்கது. தனது மகன் முகமது ஜஹான் உடன் நசியா தினமும் போராட்டத்தில் கலந்து கொண்டார். எப்போதும் முகமது ஜஹான் உடன் நசியாவின் வருகைக்காக அங்கு போராட்டக்காரர்கள் பலர் காத்து இருப்பது வழக்கம். இந்த நிலையில் இனி போராட்ட களத்திற்கு முகமது ஜஹான் வர மாட்டான் என்று நசியா தெரிவித்துள்ளார்.

தினமும் பனி

தினமும் பனி

தினமும் குளிர் பனியில் மக்களுடன் நின்று போராடிய காரணத்தால், முகமது ஜஹானுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குளிர் காய்ச்சலாக மாறி, 4 மாதமே ஆன காரணத்தால் போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல், முகமது ஜஹான் கடந்த வாரம் பலியானான். ஆம் வெறும் 4 மாத குழந்தை, சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்டு, அதன் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக பலியாகி உள்ளான்.

மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் நசியா மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்பி உள்ளார். மகனை இழந்த பின்பும், தன்னுடைய கோரிக்கையில் மிகவும் வலுவாக இருந்து, மீண்டும் போராட்டம் செய்ய நசியா திரும்பி உள்ளார். என் மகனுக்காக நான்தான் போராடுவேன். எனக்கு இருக்கும் மீதம் உள்ள இரண்டு குழந்தைகளை காக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் கண்டிப்பாக போராடுவேன், என்று நசியா குறிப்பிட்டுள்ளார்.

சிஏஏ எப்படி

சிஏஏ எப்படி

சிஏஏ என்ஆர்சி இரண்டும் வந்தால் நாங்கள் இந்த நாட்டை இழக்க நேரிடும். நாங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும். அதை நாங்கள் நடக்க விட மாட்டோம். நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம். அதற்காக நாங்கள் போராடுவோம். இந்த அரசு மக்களை பிரித்து ஆட்சி செய்ய நினைக்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று நசியா குறிப்பிட்டுள்ளார்.

English summary
4 months old infant dies in Shaheen Bagh, Mother returns to CAA protest after a week in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X