For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தை சேர்ந்த எத்தனை பேருக்கு பத்ம விருதுகள் தெரியுமா?

தமிழகத்தை சேர்ந்த எத்தனை பேருக்கு பத்ம விருதுகள் கிடைக்க போகிறது தெரியுமா.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவையொட்டி பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பெற்றோர் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 people gets Padma Awards for the year 2018

பாரத ரத்னாவுக்கு அடுத்தபடியாக நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருதும், மதுரையை சேர்ந்த ராஜகோபால் வாசுதேவனுக்கும், நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கும் பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் ராஜகோபால் வாசுதேவன் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளை கொண்டு 11 மாநிலங்களுக்கிடையே 5,000 கி.மீ.தூரத்தில் பிளாஸ்டிக் சாலைகளை அமைத்துள்ளார். இந்த ஆண்டு அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 4 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Ilayaraja, Vijayalakshmi Navaneethakrishnan and Rajagopal , Nanammal are the 4 getting Padma awards for this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X