For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சுஷ்மா சுவராஜ்? 4 வருட சாதனைகள் இவைதான்

சீனாவுடனான டோக்லாம் பிரச்சினையின்போது வெளியுறவுத்துறையின் ராஜதந்திர நடவடிக்கைகளும் சீனாவை பின்வாங்க வைத்ததில் முக்கிய இடம் பிடித்தது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அரசு நான்காண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்துள்ளது. இதில் அதிகமாக நற்பெயர் வாங்கிய ஒரு துறை என்றால் சுஷ்மா சுவராஜ் அமைச்சராக உள்ள வெளியுறவுத்துறைதான்.

சுஷ்மா பதவியேற்ற பிறகு, சுமார் 10,000 இந்தியர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நாடுகளின் போர்ச்சூழல்களில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

4 years of Modi govt: When MEA provided healing touch to Indians trapped abroad

சீனாவுடனான டோக்லாம் பிரச்சினையின்போது வெளியுறவுத்துறையின் ராஜதந்திர நடவடிக்கைகளும் சீனாவை பின்வாங்க வைத்ததில் முக்கிய இடம் பிடித்தது.

4 ஆண்டுகால மோடி ஆட்சி பற்றி, சுஷ்மா சுவராஜ் அளித்த பிரஸ் மீட்டின்போது டோக்லாமை மறக்காமல் குறிப்பிட்டார். டோக்லாம் பிரச்சினையின்போது, இந்தியா-சீனா நடுவே போர் வெடிக்கும் சூழல் இருந்தது. ஆனால், போரை தவிர்த்து, இரு நாடுகளும், ராஜாங்க ரீதியிலும், பேச்சுவார்த்தையிலும் அதற்கு தீர்வு கண்டது பெரும் சாதனை என்றார்.

கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு செல்லும் இந்திய ஆன்மீக பயணிகள் அங்கு புனித நீராட அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிருபர்கள் கேள்விக்கு, அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதியில் புனித நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் சுஷ்மா சுவராஜ்.

சுஷ்மா சுவராஜ் அமைச்சகத்தின் சில சாதனைகளை பாருங்கள்: 2014ல் இந்தியர்கள், 1,100 பேர் உக்ரைனில் இருந்தும், 3750 பேர் லிபியாவில் இருந்தும், 7,200 பேர் ஈராக்கில் இருந்தும் பத்திரமாக வெளியற்றப்பட்டனர். 2016ம் ஆண்டு 6,710 பேர் (4748 இந்தியர்கள்), ஏமனில் இருந்தும் 153 இந்தியர்கள் தெற்கு சூடானில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2016ல் சவுதி அரேபியாவில் 1500க்கும் மேற்பட்டோர் லேபர் விவகாரத்தின்போது மீட்கப்பட்டநர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த கிறிஸ்தவ பாதிரியார் அலெக்ஸ் பிரேம் மற்றும் ஜுடித் டிசோசா, பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏமனில் இருந்து கேரளாவை சேர்ந்த சாலி என்ற கன்னியாஸ்திரி மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து இஸ்லாமிய மத குரு சையது ஆசிப் அலி நிசாமி மற்றும் அவர் உறவினர் நாசிம் அலி நிசாமி திரும்பச் செய்யப்பட்டனர். 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இ-விசா வசதி செய்து தரப்பட்டுள்ளது.

English summary
The Ministry for External Affairs has been in the news for long. In the run-up to the fourth year in office, the Ministry has faced several challenges and the toughest being bringing Indians back from war torn areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X