For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 ஆண்டுகாலத்தை நிறைவு செய்த மோடி அரசு- நக்சல்களை திறம்பட எதிர்கொண்ட உள்துறை அமைச்சகம்

பிரதமர் மோடியின் அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில் நக்சல்களை உள்துறை அமைச்சகம் திறம்பட எதிர்கொண்டது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் 4 ஆண்டுகள் ஆட்சி எப்படி இருந்தது-மக்கள் கருத்து- வீடியோ

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு 4 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகளை மோடி அரசு எடுத்திருக்கிறது.

    உள்துறை அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான அமைச்சகம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளையும் நக்சல் பிரச்சனைகளையும் பெரும் சவால்களுடன் எதிர்கொண்டது. இடதுசாரி தீவிரவாத செயல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    4 years of Modi sarkar: How Home Ministry took the fight to the naxals

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை இணைப்பு திட்டம்

    இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்டுள்ள 9 மாநிலங்களில் 44 மாவட்டங்களில் 5412 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் ரூ11725 கோடி செலவில் இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 3775.56 கிலோ மீட்டருக்கு புதிய சாலைகள் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

    35 மாவட்டங்களுக்கு மத்திய அரசின் சிறப்பு நிதி உதவித் திட்டம்

    இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்களுக்கான மத்திய அரசின் சிறப்பு உதவித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது ரூ3,000 கோடி மதிப்பிலானது. ஆண்டுக்கு ரூ1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 35 மாவட்டங்களில் பொது கட்டமைப்பு, சேவைகளில் உள்ள இடைவெளிகளை சமன் செய்யக் கூடியது. 2017-18ஆம் ஆண்டில் ரூ175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

    கூடுதல் செயலர் தலைமையில் மேம்பாட்டு கமிட்டி

    அதேபோல் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் மேம்பாட்டு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணிகளை இக்குழு மேற்கொண்டு வருகிறது.

    இரு குழுக்கள் உருவாக்கம்

    இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகளை மேம்படுத்த மே 2017-ல் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.

    அதாவது இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படையினருக்கு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் காரணிகளை அடையாளம் கண்டு இந்த குழுக்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளன.

    பாதுகாப்பு படையினரின் சாதனைகள்

    • 2010=2013 ஆம் ஆண்டு காலப் பகுதியையும் 2014-2017 ஆண்டுகளையும் ஒப்பிடுகையில் இடதுசாரி தீவிரவாதிகளில் வன்முறை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
    • மொத்தம் 36.6% அளவிலான வன்முறைகள் குறைந்துள்ளன.
    • 2010-13 ஆம் ஆண்டுகாலத்தில் 6524 வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.
    • கடந்த 3 ஆண்டுகளில் இது 4136 ஆக குறைந்துள்ளது.
    • இடதுசாரி தீவிரவாத தாக்குதல்களான உயிரிழப்புகள் 55.5% குறைந்துள்ளன.
    • 2010-13ஆம் ஆண்டுகளில் இது 2428 ஆக இருந்தது.
    • கடந்த 3 ஆண்டுகளில் 1081 ஆக உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
    • இடதுசாரி தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை 14.6% அதிகரித்துள்ளது.
    • 2010-13-ல் 445 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    • கடந்த 3 ஆண்டுகளில் 510 ஆக அதிகரித்துள்ளது.
    • இடதுசாரி தீவிரவாதிகளின் சரணடைதல் எண்ணிக்கையும் 143% அதிகரித்துள்ளது.
    • கடந்த 2010-13ல் 1387 தீவிரவாதிகள் சரணடைந்தனர்.
    • இது கடந்த 3 ஆண்டுகளில் 3373 ஆக உயர்ந்திருக்கிறது,
    • இடதுசாரி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளது.
    • 2013-ல் 10 வன்முறை சம்பவங்களாக இருந்தது 2017-ல் 9 ஆக குறைந்துள்ளது.
    • இடதுசாரி தீவிரவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 2013-ல் 76 ஆக இருந்தது. 2017-ல் இது 58 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
    • காவல்நிலையங்களும் 2013-ல் 330 ஆக குறைந்த வன்முறை கடந்த ஆண்டு 291ஆக குறைந்திருக்கிறது என்கின்றன.

    பஸ்தாரிய பட்டாலியன்

    இப்பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக பஸ்தாரிய பட்டாலியன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் அதிம் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர், தண்டேவடா, நாராயண்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் 743 பழங்குடிகள் இந்த பட்டாலியனில் இணைந்துள்ளனர். இதில் 242 பேர் பெண்கள். அனைவரும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

    படையினருக்கான நிதி உதவி

    பாதுகாப்பு தொடர்பான செலவினனங்களில் இடதுசாரி தீவிரவாதம் பாதித்த 106 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினருக்காக ரூ1120.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2010-13ஆம் ஆண்டுகளில் மொத்தம் ரூ875 கோடிதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    காவல்நிலையங்களை மேம்படுத்துதல்

    காவல் நிலையங்களை வலிமைப்படுத்தும் திட்டத்துக்கு 2010-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டமிட்ட 400 காவல்நிலையங்களில் 386 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. கடந்த 4 ஆண்டுகளில் 320 காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டன.

    வளர்ச்சி சார்ந்த திட்டங்கள்

    சாலை மேம்பாட்டு திட்டம் - முதல் கட்டம் - இத்திட்டத்தின் அடிப்படையில் 8 மாநிலங்களில் 34 மாவட்டங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.மொத்தம் 5422 கிலோ மீட்டர் சாலைகளை ரூ8585 கோடியில் மேம்படுத்த திட்டமிட்டப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளில் 4537 கிலோ மீட்டர் சாலைகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 1608 கிலோ மீட்டர் சாலைகள் மிகவும் கடினமான பகுதிகளில் போடப்பட்டுள்ளது.

    லைவ் மொபைல் டவர் திட்ட்டம்

    இத்திட்டத்துக்கு 2014-ம் ஆண்டு ஒப்புதல் தரப்பட்டன. இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 2329 டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 4072 மொபைல் டவர்கள் அமைக்கும் பணி தற்போது 2-வது திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திறன் மேம்பாட்டு திட்டம்:

    து 2011-ம் ஆண்டு இடதுசாரி தீவிரவாதம் பாதித்த 34 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மேலும் 47 மாவட்டங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்பட்டது. 47 ஐடிஐ மற்றும் 68 திறன் மேம்பாட்டு அமையங்கள் ரூ407.85 கோடியில் உருவாக்க திட்டமிடப்பட்டது. இதில் 15 ஐடிஐகள், 43 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன.

    நிதி சேவை

    இடதுசாரி தீவிரவாதம் பாதித்த 32 மாவட்டங்களில் 1789 அஞ்சலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 3 கிலோட்டர் தொலைவில் அஞ்சலகம் இல்லாத பகுதிகளில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் 565 அஞ்சலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 438 புதிய வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இடதுசாரி தீவிரவாதம் பாதித்த 35 மாவட்டங்களில் 1045 ஏடிஎம் மையங்கள் 33 மாதங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 27.09.2017 அன்று 2020-ம் ஆண்டு வரை இத்திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    உள்துறை அமைச்சகத்தின் திட்டங்கள்:

    பாதுகாப்பு செலவுகள் தொடர்பான திட்டங்கள்: இடதுசாரி தீவிரவாத வன்முறைகளால் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்புகளை கிராமங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சரணடைந்த தீவிரவாதிகளின் மறுவாழ்வுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் முறையாக பொது சொத்து சேதம் உள்ளிட்டவைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    250 காவல்நிலையங்களை மேம்படுத்த சிறப்பு உட்கட்டமைப்பு திட்டம்:

    இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் சிறப்பு புலனாய்வு அமைப்புகளை மேம்படுத்தவும் சிறப்பு படைப் பிரிவினரை நிலை நிறுத்தம் 250 காவல்நிலையங்களை மேம்படுத்தும் திட்டம் இது. அடுத்த கட்டமானது காவல்நிலையங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும்.

    நிதி உதவி அதிகரிப்பு

    • சரணடையும் இடதுசாரி தீவிரவாதிகளுக்கு உடனடியாக வழங்கும் நிதி உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • மிக முக்கியமான தேடப்படும் தீவிரவாதிகள் சரணடைந்தால் வழங்கப்பட்ட ரூ2.5 லட்சமாக இருந்த நிதி உதவி ரூ5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • நடுத்தர, கீழ்நிலை தீவிரவாதிகள் சரணடைந்தால் வழங்கப்படும் நிதி உதவி ரூ1.5 லட்சத்தில் இருந்து ரூ2.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • மாதாந்திர நிதி உதவியானது ரூ4,000-ல் இருந்து ரூ6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    கருணைத் தொகை அதிகரிப்பு

    • கொல்லப்படும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு ரூ1 லட்சம் வழங்கப்பட்ட நிதி உதவி ரூ2 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
    • பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ3 லட்சத்தில் இருந்து ரூ20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • மாதாந்திர சிறப்பு நிதி உதவியானது ரூ3,000=ல் இருந்து ரூ6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முதல் முறையாக சேர்க்கப்பட்ட திட்டங்கள்

    கருணைத் தொகை:

    • மோதல்களில் நிரந்தரமாக பாதுகாப்புப் படையினர் இயங்க முடியாமல் போனால் ரூ5 லட்சம் நிதி உதவி
    • சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் நிதி உதவி
    • பாதுகாப்புப் படையினருக்கு ரூ3 லட்சம் நிதி உதவி
    • பொதுமக்களுக்கு ரூ1 லட்சம் நிதி உதவி.

    English summary
    The Narendra Modi government completed four years in office. The government has taken several key decisions in the past four years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X